மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

நீட் எதிர்ப்பு: திரண்ட கட்சிகள்!

நீட்  எதிர்ப்பு: திரண்ட  கட்சிகள்!

'நீட் பயிற்சி மையங்கள் என்ற பெயரால் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வசதியான தொழிலை ஏற்படுத்துவதற்கு தான் நீட் தேர்வு பயன்பட்டுள்ளது' என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு குறித்து கி.வீரமணி தலைமையில் ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பினர் கடந்த 28ஆம் தேதி பெரியார் திடலில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் அடிப்படையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிப்ரவரி 5 ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்பாட்டத்திற்கு திமுக, மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 5) திராவிடர் கழகத் தலைவர் கிவீரமணி தலைமையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கி.வீரமணி, இது தற்காலிக ஆர்ப்பாட்டம் அல்ல, தமிழக மாணவர்களின் கனவை அழிக்கும் சமூக நீதியைக் குலைக்கும் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 6 பிப் 2018