மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

கார்பரேட்டுகளுக்கும், காப்பீட்டுத் துறைகளுக்குமான பட்ஜெட்!

கார்பரேட்டுகளுக்கும், காப்பீட்டுத் துறைகளுக்குமான பட்ஜெட்!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அறிவித்துள்ள கடைசி பட்ஜெட் கார்பரேட்டுகளுக்கும், உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கும், காப்பீட்டு நிறுவனங்களுக்கும் பயன்படும் என்று மூடிஸ் கடன் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மோடி அரசு வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.1.49 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது நடப்பு நிதியாண்டை (2017-18) விட ரூ.0.18 லட்சம் கோடி கூடுதலாகும். நடப்பு பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.1.31 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல சாலை கட்டமைப்புத் துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.89,544 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நடப்பு பட்ஜெட்டைவிட 6.7 சதவிகிதம் கூடுதலாகும். நடப்பு பட்ஜெட்டில் சாலைக் கட்டமைப்பிற்கு ரூ.83,900 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக உள்கட்டமைப்புத் துறைக்கு 20 சதவிகிதம் கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், சுகாதாரத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இலவச காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் காப்பீட்டு நிறுவனங்கள் மிகுந்த லாபமடையும். இந்த சமயத்தில் மூன்று பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் இணைக்கப்படவிருப்பதால் இந்நிறுவனங்களுக்கும் இத்திட்டம் பயனளிக்கும். பத்திரச் சந்தையில் முதலீடுகளை அதிகரிக்க மத்திய அரசு ஊக்குவித்துவருவதால் கார்பரேட் நிறுவனங்கள் லாபமடையும். பத்திர முதலீடுகளுக்கான விதிமுறைகள் தளர்த்தப்படுவதால் இதில் கார்பரேட் முதலீடுகள் அதிகரிக்கும்" என்று தெரிவித்துள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 6 பிப் 2018