மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

இந்திய பெண்கள் அணியும் வெற்றி!

இந்திய பெண்கள் அணியும் வெற்றி!

இந்தியா தென்னாப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆண்கள் அணி டெஸ்ட் போட்டிகளில் சொதப்பினாலும் ஒருநாள் போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பெண்கள் கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாட உள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள் ஸ்மிர்தி மந்தனா (84), கேப்டன் மிதாலி ராஜ் (45) இருவரும் அணியின் ஸ்கோர் உயர உதவினர். அதன்பின்னர் வந்த வீராங்கனைகள் அனைவரும் குறைந்த ரன்கள் சேர்த்து வெளியேறியதால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களைச் சேர்த்திருந்தது.

அதன்பின்னர் 214 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா வீராங்கனைகள் இந்திய அணியின் பந்து வீச்சினை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கினர். தென்னாப்பிரிக்கா அணி முதல் 23 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டேன் வான் நெய்கெர்க் (41) நிலைத்து நின்று விளையாடினார். ஆனால் அவர் ஆட்டமிழந்ததும் தென்னாப்பிரிக்க அணி 125 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பில் ஜுலன் கோஸ்வாமி 4 விக்கெட்டுகளையும், ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 84 ரன்கள் அடித்த ஸ்மிர்தி பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருது பெற்றார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 6 பிப் 2018