சுகாதாரமான முறையில் பிரசாதம் செய்ய வேண்டும்!


நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பான, சுகாதாரமான முறையில் பிரசாதங்கள் செய்ய வேண்டும் என உணவுப் பாதுகாப்பு ஆணையம் மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களுக்கு நாளொன்றுக்கு 30 கோடி மக்கள் செல்கின்றனர். அவர்களுக்கு,பாதுகாப்பான, சுகாதாரமான முறையில் பிரசாதங்கள் செய்து வழங்க வேண்டும்.
இவ்வாறு கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அல்லது குருத்வாராக்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையத்தின் உரிமத்தை பெற்றிருக்க வேண்டும். அதே போன்று உணவு பாதுகாப்பு ஆணையத்தின் விதிகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.