மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 பிப் 2018

ப்யூட்டி ப்ரியா: முக அலங்காரமும் சிகையலங்காரமும்!

ப்யூட்டி ப்ரியா: முக அலங்காரமும் சிகையலங்காரமும்!

அகமும் முகமும் அழகூட்டுவதே நம்மை மேலும் புத்துணர்ச்சியாக காட்டும். அதனாலேயே பெரும்பாலும் பலர் எப்போழுதும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர். சுருக்கமாக சொல்லப்போனால் முக அலங்காரமும் சிகை அலங்காரமும் என்று கூட சொல்லலாம். அவற்றின் சிலவற்றை பார்ப்போம்

மாலையில் நடைபெறும் ரிசப்ஷனுக்கு சற்று அதிகமாகவும், காலையில் மிதமாகவும் மேப் அப் போட்டுக்கொள்ளுங்கள். திருமண நாளன்று அதிகமாக வியர்த்துக் கொட்டும். அதனால், கிரீம் பேஸ் மேக் அப்பை விட, பவுடர் மேக் அப் போடுவது நல்லது. மேக் அப் போடுவதற்கு முன் ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்திற்கு ஒத்தடம் கொடுங்கள்.

அவரவர் நிறத்திற்கேற்ப பவுண்டேஷன், பவுடர், லிப்ஸ்டிக் போட வேண்டும்.

கண்களைச் சுற்றி ஐ-லைனர் வரையும் போது கலை நயத்துடன் வரைய வேண்டும். நிறத்திற்கேற்ப ‘ஐ-ஷேடோ’ வைத் தேர்ந்தெடுங்கள்.

மேக்அப் போடும்போது கழுத்து, கைகள் வரை ஒரே சீராக போடப்பட்டுள்ளதா என்று கவனிக்க வேண்டும்.

கன்னத்திற்குப் போடப்படும் ‘ரூஜ்’ தனியாக சிவப்பாகத் தெரியாமல் முகத்தோடு ஒன்றிப் போக வேண்டும். இதைச் சரியாகச் செய்தால் பள்ளமாக உள்ள கன்னங்களைக்கூடச் சரிசெய்திட முடியும்.

மெரூன் அல்லது பிரவுன் நிறத்தில் பொட்டு வைத்தால் போட்டோவில் பளிச் சென்று தெரி வீர் கள். மேலும் அழகூட்ட…பொட்டைச் சுற்றி கற்களால் டிசைன்கள் செய்துகொள்ளுங்கள்.

மேக் அப் செய்யும்போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தோலில் உள்ள சுருக்கங்கள் மறைந்துவிட வேண்டும். நல்ல தரமான மேக் அப் பொருட்களையே பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால், திருமண நேரத்தில் தோலில் அலர்ஜி ஏற்படும்.

சிகையலங்காரம்

மணப்பெண்ணின் அழகுக்கு மெருகூட்டுவது சிகையல ங்கா ரம். முன்புறம் முகத்தின் மேற்புறம் சிகை யலங்காரம் செய்வதற்கு ‘ப்ரண்ட் செட்’ என்று பெயர். இதற்கு பொருந்தும் அளவில் தான் பின்புறம் தலையை அலங்கரிக்க வேண்டும். பின்னல் போட்டு ஜடை அல ங்காரம் செய்து, பின்னலில் பூ வைப்பதற்கு பதில் ஜரிகை, முத்து, கற்களால் செய்யப்பட்ட மோடி பைப்கள், பைப் பின்னல், ஐந்து கால் பின்னல், மேலே கொண்டை கீழே பின்னல் போடுவது என்று பல வகைகள் உள்ளன.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

செவ்வாய் 6 பிப் 2018