மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

மானிய ஸ்கூட்டர் : அலைமோதிய பெண்கள்!

மானிய ஸ்கூட்டர் : அலைமோதிய பெண்கள்!

மானிய விலையில் ஸ்கூட்டர் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாளான இன்று (பிப்ரவரி 5), சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50,000 ரூபாய்க்கும் மிகாமல் இருப்பவர்களுக்கு இருசக்கர வாகனத்தின் விலையில் 50 சதவிகிதம் மானியம் அல்லது 25,000 ரூபாய் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 22ஆம் தேதி முதல் வினியோகிக்கப்பட்டுவந்தது. வினியோகம் தொடங்கியது முதல் சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்களிலும் பெண்கள் ஆர்வமாக வந்து விண்ணப்பங்கள் வாங்கத் திரண்டனர். இதற்கு விண்ணப்பிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் அதற்கான ஆவணங்களை வாங்குவதற்குச் சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது. இந்நிலையில், விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாள் என்றும், மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

கடைசி நாளான இன்று காலை 6 மணி முதல் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பெண்கள் வரிசையில் காத்து நின்றனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது. கடந்த வெள்ளிக்கிழமை வரை சென்னையில் 17 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டிருந்தன. அதில் 6900 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. கூட்டம் அதிகமாக இருக்கும் மண்டலங்களில் கூடுதலாக கவுண்டர்கள் திறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று விண்ணப்பம் செய்ய வந்தவர்களுக்கு மாலை 5 மணி அளவிலேயே எல்எல்ஆர் கிடைக்கும். இதனால் கடைசி நாளான இன்று, 5 மணிக்குள் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் 1 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படவுள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான வருகிற 24ஆம் தேதி இந்தத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

திங்கள் 5 பிப் 2018