மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

சென்னை விரிவாக்கம் : அரசாணை வெளியீடு!

சென்னை விரிவாக்கம் : அரசாணை வெளியீடு!

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 55 வருவாய் கிராமங்களுடன் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள 67 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 122 வருவாய் கிராமங்களுடன் 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 3 வருவாய் கோட்டங்கள், 16 வட்டங்களை உள்ளடக்கி பெருநகர சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான அரசாணை இன்று (பிப்ரவரி 5) வெளியிடப்பட்டுள்ளது.

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை

தண்டையார்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு, வடசென்னை கோட்டம் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம் ஆகிய 5 வட்டங்களுடன் 32 வருவாய் கிராமங்கள் உள்ளன.

அம்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு மத்திய சென்னை கோட்டம் அம்பத்தூர், அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூர் ஆகிய 6 வட்டங்களுடன் 47 வருவாய் கிராமங்கள் உள்ளன.

கிண்டியைத் தலைமையிடமாகக் கொண்டு தென் சென்னை கோட்டம் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 5 வட்டங்களுடன் 43 வருவாய் கிராமங்கள் உள்ளன.

இந்த விரிவாக்கத்தின் மூலம் 1709 சிறு கிராமங்கள், சென்னை பெருநகர திட்டப்பகுதியின் எல்லைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

திங்கள் 5 பிப் 2018