மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

மீம்ஸ் பார்த்து நியூஸ் படிங்க: அப்டேட்குமாரு

மீம்ஸ் பார்த்து நியூஸ் படிங்க: அப்டேட்குமாரு

வெற்றிகொடிகட்டு படத்துல சினிமா நடிகர்கள் படத்தை வச்சு ஜோசியம் சொல்ற மாதிரி இங்க ஒருத்தர் அரசியல் தலைவர்களை வச்சு ஜோசியம் சொல்றாருப்பா. அதையே நான் கொஞ்சம் மாத்தி சொல்றேன். ராகுல் போட்டோ வந்தா நீங்க அம்மாவுக்கு செல்ல பிள்ளை. அகிலேஷ் போட்டோ வந்தா அப்பாவுக்கு அடங்காத பிள்ளைன்னு சொல்லலாம். மோடி போட்டோ வந்தா யார் என்ன சொன்னாலும் தான் பாட்டுக்கு சுத்திக்கிட்டு இருப்பீங்கன்னு அர்த்தம். அதே நேரத்துல ஓபிஎஸ்-எடப்பாடி சேர்ந்த மாதிரி போட்டோ வந்துருச்சுன்னா யாரும் உங்கள் பேச்சை கேட்க மாட்டாங்கன்னு அடிச்சு சொல்லலாம். இதே மாதிரி ஸ்டாலின், வைகோ, விஜயகாந்துன்னு ஒரு பெரிய லிஸ்ட்டே போட்டு ஜோசியம் பார்க்கலாம். என்ன ட்ரை பண்ணி பார்க்கீங்களா?. கேட்டுட்டு அப்டியே போயிடாதீங்க அப்டேட்டை பார்த்துட்டு போங்க.

@mekalapugazh

"அவன் 100/100 வாங்கும் போது.. நீ ஏன் வாங்கல"

அப்பாவின் பைக்ல இருந்து இறங்கிய மகன்,

"அவங்கப்பா 40லட்சரூபா கார் வச்சிருக்கார்.."

என்றபடியே பள்ளியினுள் சென்றான்.

@kavitha129

சீனாவில் உள்ள தைவான் என்ற இடத்தில் நில நடுக்கம்

இது யாரோட கோவம் மீனாட்சியா ஆண்டாளா

@banutalks92

சோகத்தில் இருப்பவரை மிகவும் எளிதாக சிரிக்க வைப்பது மீம்ஸ் தான்

@PragaKutty*

மிக பெரிய சம்பவமாக இருந்தாலும் பேசபடுவதும்,,,, அமுக்கபடுவதும்....

மீடியாக்களின் கையில்தான் இருக்கிறது...

@love_twitz

அம்மனுக்கு சுடிதாரா..கலா ரசிகன்டா

அப்டியே முருகனுக்கு ஜீன்ஸீம் டிசர்ட்டும் போட்டுவுட்டிங்கனா அதை பார்த்துட்டு பிறவி பலனை அடைஞ்சிருவேன்

@kanavukadhala

வீட்டுல டிவி ஓடும் போது

டிவியை பாக்குறவங்கள விட

டிவிய ஒட விட்டு செல்போன

பாக்குறவங்க தான் அதிகம்

@kanavukadhalan

உண்மையைப் பேசி

ஒருவருடைய மனம்

நோகுமென்றால்

மௌனம் பேசி

அந்த இடத்தை விட்டு

நகர்ந்து விடுவது

நல்லது

@HAJAMYDEENNKS

தவறவிட்ட பின்புதான் தெரிகிறது அது "வாய்ப்பு" என்று...!

@Shan Karuppusamy

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரும் அண்ணா பல்கலைக் கழகத்தின் கோவை மையத்தின் முன்னாள் துணைவேந்தரும் ஊழல் வழக்கில் பிடிபட்டு ஒரே சிறையில். நல்லவேளை பாரதியும் அண்ணாவும் போய்ச்சேர்ந்து விட்டார்கள்.

@itzkarthik_v

கர்நாடக முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படாத நிலையில், முதல்வர், அமைச்சர்கள் அவசர ஆலோசனை - செய்தி

உள்ளூருல தான் கழுவி ஊத்துராங்கனா வெளியூருலயுமா

@shambo_dines

சரியோ தப்போ....... வெற்றியோ தோல்வியோ.....

உனக்கு என்ன தோனுதோ அத செஞ்சிரு..

நம்ம வாழ்க்கைய நம்மதான் வாழ்றோம்னு

ஒரு நிம்மதியாது மிஞ்சும்....

@வாசுகி பாஸ்கர்

“தனது முன்னோர்கள் இந்துக்கள் என ஒத்துக்கொள்ளாத இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள்”- சுப்பிரமணிய சாமி

வாடகைக்கு வந்தவன், ஓனர்கிட்ட வாடகை கேட்டானாம்!

@VKtwitz_Vicky

வங்கியில் செல்போன் உபயோகிக்காதீர் என்ற வாசகம் வாடிக்கைளாளருக்கு மட்டும் தான் போல...!!

@Aruns212

திங்கள்கிழமை கிடைக்கும் சில அற்ப சந்தோசங்களில் ஒன்று,முந்தைய நாள் சிக்கன் குழம்பு,இன்றைய காலை தோசைக்குக் கிடைப்பது.

@Piramachari

உங்கள் அம்மா பேச்சை இன்னமும் நீங்கள் கேட்டுகொண்டிருந்தால் நீங்கள் தான் ராகுல்

உங்கள் அப்பா பேச்சை இன்னமும் நீங்கள் மீறிக்கொண்டிருந்தால் நீங்கள் தான் அகிலேஷ்

யார் பேச்சையும் கேட்கவில்லை என்றால் நீங்கள் தான் மோடி.

யாரும் உங்கள் பேச்சை கேட்கவில்லை என்றால் நீங்கள் ஓபிஎஸ்-எடப்பாடி

@Shanmugapriyan Sivakumar

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை "ஹிந்துத்துவ" அறநிலையத்துறையாக மாற்றப்படுவதை தடுத்தேயாக வேண்டும்.

இல்லையென்றால் கோவில் நுழைவு போராட்டம் - தேவதாசி முறை எதிர்ப்பு என மீண்டும் வரலாற்றை தொடங்க வேண்டி இருக்கும்.

@ameerfaj

"நீயூஸ்'அ பார்த்து நீயூஸ் தெரிஞ்சுகிட்ட காலம் போய்

இப்ப

"மீம்ஸ்'அ பார்த்து நீயூஸ் தெரிஞ்சுகிறோம் ..

@iamlaxmi1

நாம் அழகாக இருக்கிறோம் என்ற தன்னம்பிக்கையை வளர்ப்பதில் ஃபோட்டோஷாப் என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது...

@amuduarattai

மத்திய அரசில் 2.53 லட்சம் பேர் கடந்த 2 ஆண்டுகளில் நியமனம்.

அப்போ, கடந்த 2 வருடத்தில், 2.53 லட்சம் பேரு புதுசா பக்கோடா, விற்க வந்திருக்காங்க.

-லாக் ஆஃப்

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 5 பிப் 2018