மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

கட்டப்பஞ்சாயத்து விவாகரத்து சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம்!

கட்டப்பஞ்சாயத்து விவாகரத்து சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம்!

கட்டப்பஞ்சாயத்து மூலம் திருமண உறவைப் பிரிப்பது சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆணவக் கொலைக்கு எதிராகச் சக்தி வாகினி என்ற தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. அதில் சட்ட பூர்வமாக பதிவு செய்யப்பட்ட திருமணம்கூட கட்ட பஞ்சாயத்து மூலம் விவாகரத்து செய்யப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. எனவே அனைத்து மாநிலங்களிலும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த மனு இன்று (பிப்ரவரி 5) உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி டி.எஸ்.சந்திரசூட் , நீதிபதி ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “வயது வந்த இருவர் திருமணம் செய்துகொள்வதில் மூன்றாவது நபர்கள் தலையிடக்கூடாது. கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட மூன்றாவது நபர்கள் தலையிடுவதால்தான் ஆணவக் கொலைகள் அதிகரிக்கின்றன. சட்ட ரீதியாகப் பதிவுசெய்யப்பட்ட திருமணங்கள், அங்கீகாரம் பெற்றவை. அந்தத் திருமண உறவைச் சட்ட ரீதியாக மட்டுமே விவாகரத்து செய்ய முடியும். அதைத் தவிர்த்து மூன்றாவது நபர்கள் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்துமூலம் திருமணத்தைப் பிரித்துவைப்பது சட்டவிரோதம். இதில் பெற்றோர்களும் தலையிட முடியாது” என்று உச்ச நீதிமன்றம் உறுதிபடக் கூறியுள்ளது.

ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கட்டப்பஞ்சாயத்து விவாகரத்து அதிகமாக இருப்பதாகத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதுபோன்று திருமண உறவைப் பிரிப்பவர்களிடமிருந்து அந்தத் தம்பதியரைப் பாதுகாக்க என்னென்ன வழிகளைக் கையாளலாம் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்க மத்திய அரசும், மனுதாரர்களும் முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பான விசாரணை பிப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 5 பிப் 2018