மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

ஸ்டாலின் அமைத்த ஆய்வு குழு

ஸ்டாலின்  அமைத்த ஆய்வு குழு

திமுக ஆய்வுக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் நிர்வாகிகளுக்காக திமுக தலைமைக் கழகத்திலிருந்து இரு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் வகையில் திமுக மாவட்ட, பேரூர், ஒன்றிய கழக நிர்வாகிகளுடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறார். கடந்த 1ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் கள ஆய்வு என்ற பெயரில் ஆரம்பித்த ஆய்வுக் குழு கூட்டத்தில் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தங்களுடைய மாவட்டத்தில் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள், புகார் அல்லது தங்களின் குறைகளைத் தெரிவிக்க புகார் பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.

முதல் நாள் கூட்டத்தில் இறுதியாகப் பேசிய செயல்தலைவர் ஸ்டாலின், இந்தப் புகார் பெட்டியில் இருக்கும் கடிதங்களை நானே பிரித்துப் படிப்பேன். புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் நான் அமைத்துள்ள ஆய்வுக் குழு யாரின் மீது புகார் இருக்கிறதோ அவரின் வீட்டு வாசலுக்கு வந்து நிற்கும். அப்போதே நீங்கள் முடிவு செய்துகொள்ளலாம், கட்சியில் இருக்க மாட்டீர்கள் என்று. அதனால் இனியாவது கட்சி வளர்ச்சிக்கு ஒழுங்காகப் பாடுபடுங்கள்" என்று பேசியதாக தகவல் வெளியானது. இதுகுறித்து நாம் ஸ்டாலினுடன் நேருக்கு நேர்! என்ற பெயரில் செய்தியும் வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் கள ஆய்வில் பங்கேற்க வரும் கட்சி நிர்வாகிகளுக்கு திமுக தலைமைக் கழகத்தில் சார்பில் நேற்று ( பிப்ரவரி 4) முக்கியமான இரு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் அறிவிப்பில் நாம் மேற்கூறியதுபோல புகார் பெட்டியில் போடப்படும் மனுக்களை விசாரிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் மொத்தம் 16பேர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவானது மனுக்களை விசாரித்து ஸ்டாலினிடம் அறிக்கை அளிக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது அறிவிப்பில் கள ஆய்வில் பங்கேற்க வரும் ஊராட்சிச் செயலாளர்கள் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை ஸ்டாலினிடம் கொடுப்பதற்கு சால்வை மற்றும் புத்தகம் கொண்டு வர வேண்டாம். அதற்குப் பதில் மினிட் புத்தகங்கள் கொண்டு வர வேண்டும் என்று ஏற்கனவே ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். எனவே வரும் நாட்களின் பங்கேற்கும் நிர்வாகிகள் கண்டிப்பாக மினிட் புத்தகங்களுடன் கள ஆய்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 5 பிப் 2018