பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும்!


ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதலில் ஈடுபட்டுவருகிறது. பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலுக்கு தொடர்ந்து உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று ராணுவத் துணைத் தளபதி சரத் சந்த் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களையும் ராணுவ நிலைகளையும் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்திவருகிறார்கள். இதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் நேற்று அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.