விரல் அசைவுகளை பதிவு செய்யும் ஸ்மார்ட்வாட்ச்!


ஹூவாய் நிறுவனம் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒன்றின் காப்புரிமையை பதிவு செய்துள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பல்வேறு புதுமைகளை நிகழ்த்தி வரும் ஹவாய் நிறுவனம் WIPO (World Intellectual Property Organization) காப்புரிமை மையத்தில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச்சின் காப்புரிமையைப் பதிவிட்டுள்ளது.
அதன்படி அல்ட்ராசோனிக் அல்லது இன்ஃப்ராரெட் கதிர் வீச்சினை கொண்டு செயல்படும் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆனது பயனர்களின் கைகளின் பின்புறம் அவர்கள் எழுதுவதையும், உருவங்களை வரைவதையும் விரல் அசைவுகளை வைத்து கண்டறியும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது. இதற்கு முன்னர் கணினிகளில் trackpad என்ற ஒரு தொழில்நுட்பம் பயனர்கள் விரலால் எழுதுவதை கணினியில் ஏற்றம் செய்து கொள்ளும் வசதியுடன் வெளியானது. அதேபோன்று இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் வடிவமைக்கப்பட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் வழங்கப்படும் சென்சார் நான்கு திசைகளிலும் கதிர்களை ஒளிரச் செய்யும் வகையில் இருக்கும் என பதிவிடப்பட்டுள்ளது. புதிய வெர்ஷன் ஸ்மார்ட்வாட்ச்களில் இந்த தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பார்சிலோனாவில் நடைபெறவிருக்கும் தொழில்நுட்ப நிகழ்ச்சியில் ஹவாய் நிறுவனம் அறிமுகம் செய்யலாம்.
மேலும் மற்ற ஸ்மார்ட்வாட்ச்களை போல் ஸ்மார்ட்போன்களை கண்ட்ரோல் செய்வதற்காக பல்வேறு வசதிகள் இதில் இணைக்கப்படவுள்ளன.