கத்தரிக்காய் விலை கடும் சரிவு!


கத்தரிக்காயின் வரத்து அதிகரித்துள்ளதால் சந்தையில் கத்தரிக்காய் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தில் கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, சின்ன வெங்காயம், கொத்தமல்லி, புதினா, அவரைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு அறுவடையாகும் காய்கறிகள், நெல்லை மட்டுமின்றி தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றது.