மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

கண்டித்த தலைமையாசிரியருக்குக் கத்திக் குத்து!

கண்டித்த தலைமையாசிரியருக்குக் கத்திக் குத்து!

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பனிரெண்டாம் வகுப்பு மாணவன் பள்ளித் தலைமையாசிரியரைக் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அரசு உதவி பெறும் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. இங்கு, ஹரிஹரன் என்ற மாணவன் பனிரெண்டாம் வகுப்பு படித்துவருகிறார். இவர் ஒழுங்காக படிக்கமாட்டார் என்றும்,வகுப்பறையில் அதிகமாக சேட்டை செய்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சரியாகப் படிக்கவில்லை என்பதால் பெற்றோரைப் பள்ளிக்கு அழைத்துவருமாறு தலைமையாசிரியர் பாபு கூறியுள்ளார்.

வார விடுமுறை முடிந்து இன்று வகுப்புகள் நடைபெற்றன. அப்போது, மதிய உணவு இடைவேளைக்கு முன்பு வகுப்பறைக்குச் சென்ற தலைமையாசிரியர் பெற்றோரை அழைத்து வராததால் மாணவனைக் கண்டித்துள்ளார்.

அப்போது, பையில் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து அவரின் வயிற்றில் குத்திவிட்டு அங்கிருந்து மாணவர் தப்பி ஓடிவிட்டார். வயிற்றில் ஆழமான காயம் ஏற்பட்ட தலைமையாசிரியரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திருப்பத்தூர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், தப்பிச் சென்ற மாணவனை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 5 பிப் 2018