மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை!

எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை!

தமிழகத்தில் மீத்தேன் மற்றும் ஷேல் கேஸ் உள்ளிட்ட எந்த திட்டமும் செயல் படுத்தப்படவில்லை என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மீதேன் திட்டம், ஷேல் கேஸ் திட்டம் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் என்று மத்திய அரசு காவிரி டெல்டா படுகையில் எரிவாயு எடுப்பதற்கான திட்டங்களை அறிவித்து வருகின்றது. மேலும் கடந்த ஆண்டு திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 45 க்கும் மேற்பட்ட கிராமங்களை பெட்ரோ கெமிகல்ஸ் மண்டலமாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் தமிழக விவசாயம் முற்றிலும் அழிந்து விடக்கூடும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இத்தகைய தொடர்ச்சியான அறிவிப்புகளை எதிர்த்து விவசாயிகளும் பொதுமக்களும் போராடிவருகின்றனர்.

இந்நிலையில், இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு நாடளுமன்றம் இன்று (பிப்ரவரி 5) கூடியது. மக்களவையில் எரிவாயு குறித்தான விவதாத்தின் போது பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தில் மீத்தேன் மற்றும் ஷேல் கேஸ் உள்ளிட்ட எந்த திட்டமும் செயல் படுத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், தமிழக அரசு மற்றும் சுற்றுசூழல் அமைப்பின் அனுமதியை பெற்ற பிறகே நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் உற்பத்தி தொடங்க முடியும் என்றும் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி சார்பாக எந்தப் புதிய திட்டங்களும் தொடங்கப்படவில்லை என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 5 பிப் 2018