மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

மீனாட்சியம்மன் கோயில்: 5 பேர் குழு ஆய்வு!

மீனாட்சியம்மன் கோயில்: 5 பேர் குழு ஆய்வு!

மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து, விசாரணை மேற்கொள்ள 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளதாக மதுரை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கிழக்கு ராஜ கோபுரப் பகுதியிலிருந்து சுந்தரேஸ்வரர் சுவாமி சன்னதி செல்லும் வழியிலுள்ள ஆயிரம் கால் மண்டபத்தின் அருகே கடந்த பிப்ரவரி 2ஆம் தேதியன்று இரவு 10.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு உடனடியாக தகவல் அனுப்பப்பட்டு அவர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் ஆயிரங்கால் மண்டபம் தப்பியது. ஆனால் அதிக வெப்பம் காரணமாக வீரவசந்தராயர் மண்டபத்தின் ஒரு பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்தது. சில கல் உத்திரங்களும் இடிந்தன. மண்டபம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அங்கு பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. எனினும் சுந்தரேசுவரரையும், மீனாட்சியம்மனையும் பக்தர்கள் மற்ற வாசல்கள் வழியாகத் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மீனாட்சியம்மன் கோயிலில் எதிர்காலத்தில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளதாக மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். இந்தக் குழுவில் தீயணைப்பு, வருவாய், பொதுப்பணி, இந்து சமய அறநிலையம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இடம்பெறவுள்ளனர். கோயில் வளாகத்திற்குள் உள்ள கடைகள் அனைத்தும் முறையான அனுமதி பெற்றுள்ளதா என்பது குறித்து இக்குழு விசாரணை நடத்தவுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 5 பிப் 2018