மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

தர்மயுத்தம் வெற்றி அடைந்தது!

தர்மயுத்தம் வெற்றி அடைந்தது!

ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்தம் வெற்றி பெற்றுள்ளதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று (பிப்ரவரி 5) தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பதவி விலகிய பன்னீர்செல்வம், தன்னை முதல்வர் பதவியிலிருந்து விலக கோரி வற்புறுத்தியது சசிகலா தான் என்று கூறி மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் இருந்தார். தனக்கு நீதி கிடைக்குவரை தர்மயுத்தம் நடத்தப்போவதாகவும் ஓபிஎஸ் அறிவித்திருந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால் தமிழக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கட்சி மற்றும் ஆட்சியிலிருந்து சசிகலா குடும்பத்தினர் அனைவரும் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கை ஏற்கபடவே கடந்த ஆகஸ்டு 21 ஆம் தேதி அதிமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து துணை முதல்வர் பதவியையும் பெற்றார்.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 5) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்தம் வெற்றி பெற்றுள்ளதாகவும் ஓபிஎஸ் கூறியபடியே சசிகலா குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக கட்சியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும் நீக்கப்பட்டு விட்டார்கள். அதிமுகவுக்கும் சசிகலா குடும்பத்திற்கும் இனி ஒட்டுமில்லை உறவுமில்லை என்றும் கூறினார்.

மேலும், அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால் தான் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறமுடியும் என்ற அமைச்சர் செல்லூர் ராஜுவின் கருத்து குறித்தான கேள்விக்கு, கட்சி தொண்டர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவ்வாறு அமைச்சர் பேசியுள்ளதாகவும், ஆனால் நடைமுறையில் கட்சி பாகுபாடின்றி பொதுமக்கள் அனைவருக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

திங்கள் 5 பிப் 2018