மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

டப்பிங் பேச மறுக்கும் அரவிந்த்சாமி

டப்பிங் பேச மறுக்கும் அரவிந்த்சாமி

அரவிந்த்சாமியின் சம்பளத்தை இன்னும் செட்டில் செய்யாததால் சதுரங்க வேட்டை 2 படத்துக்கு அவர் இன்னும் டப்பிங் பேசாமல் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் மனோபாலா.

சைத்தான் படத்தின் இயக்குநர் என்.வி.நிர்மல் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சதுரங்க வேட்டை 2’. அரவிந்த்சாமி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். சதுரங்க வேட்டை படத்தின் இயக்குநர் வினோத், இப்படத்தின் கதையை எழுதியுள்ள நிலையில் மனோபாலா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது. அதன் பின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்றுவருகின்றன. எல்லாப் பணிகளும் முடிந்து ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் இந்தப் படத்துக்கு, அரவிந்த்சாமி இன்னும் டப்பிங் பேசவில்லை என்றும் அவருடைய சம்பளத்தை இன்னும் செட்டில் செய்யாததே இதற்குக் காரணம் என்றும் தகவல் வெளியாகியது.

இது குறித்து ஸிஃபி இணையதள பக்கத்திற்கு மனோபாலா அளித்துள்ள பேட்டியில், “அரவிந்த்சாமி மீது எந்தத் தவறும் இல்லை; அவரால் எந்தப் பிரச்சினையும் உருவாகவில்லை. நான்தான் அவருக்குப் பேசிய சம்பளத்தை இன்னும் அளிக்கவில்லை. நான் கொடுத்துவிட்டால் அவர் டப்பிங் பேசத் தயாராக இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 5 பிப் 2018