மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

மெஸ்சியை வெளியேற்றியது ஏன்?

மெஸ்சியை வெளியேற்றியது ஏன்?

லா லீகா தொடரில் நேற்று (பிப்ரவரி 4) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி விளையாடிய போட்டியில் முதல் பாதியில் மெஸ்சியை விளையாட அணிமதிக்காமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

லா லீகா தொடர் கடந்த வருடம் கடந்த வருடம் (2017) ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று நடைபெற்ற போட்டியில் பார்சிலோனா மற்றும் எஸ்பேன்யோல் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதும் அணியில் இடம்பெறும் வீரர்கள் பெயர்பட்டியல் வெளியானது. அதில் பார்சிலோனாவின் முன்னணி வீரரும், கால்பந்து உலகின் ஜாம்பவான்களில் ஒருவருமான லியோனல் மெஸ்சியின் பெயரை குறிப்பிடவில்லை. எனவே அவரது ரசிகர்கள் பெரும்பாலும் இதனால் அதிர்ச்சி அடைந்தனர். கால்பந்து போட்டியை ரசிக்க வந்த பலரும் மைதானத்தில் கூச்சலிட்ட வண்ணம் இருந்தனர்.

அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பார்சிலோனா அணி நிர்வாகம் அவர் கடந்த போட்டியில் முழுவதும் விளையாடியதால் அவர்க்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.

நேற்று நடைபெற்ற போட்டியில் முதல் பாதியில் இரண்டு அணிகளும் சமநிலையுடன் விளையாடின. இரண்டாம் பாதியில் மெஸ்சி களமிறங்கி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் 66ஆவது நிமிடத்தில் எஸ்பேன்யோல் அணியின் மொரேனோ சிறப்பாக ஒரு கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். போட்டி முடிவதற்கு சிறிது நேரம் முன்புவரை பார்சிலோனா அணி எந்த கோலும் அடிக்கவில்லை. ஆனால் 83ஆவது நிமிடத்தில் ஒரு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியே பயன்படுத்திய மெஸ்சி அதனை ஜெரார்டு பிக்யுவிடம் சரியே அடிக்க அதனை கோலாக மாற்றினர். எனவே போட்டி 1-1 என சமநிலையில் முடிவடைந்தது.

இந்த தொடரைப் பொறுத்தவரை இதுவரை விளையாடிய 22 போட்டிகளில் 18 போட்டிகளில் வெற்றி பெற்று 4 போட்டிகளை சமன் செய்துள்ள பார்சிலோனா அணி, இன்னும் இரண்டு போட்டிகள் தோல்வியைத் தவிர்த்தால், லா லீகா தொடரில் தோல்விகளை சந்திக்காமல் 24 போட்டிகள் விளையாடிய ரியல் மாட்ரிட் அணியின் சாதனையை சமன் செய்யும்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 5 பிப் 2018