மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

எதற்காக என்னை நீக்கினீர்கள்?

எதற்காக என்னை நீக்கினீர்கள்?

தன்னை நீக்கியதற்கான காரணம் தெரியவில்லை என்றும், இதுகுறித்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோருக்குக் காரணம் கேட்டு கடிதம் எழுதியுள்ளேன் என்றும் அண்ணா தொழிற்சங்க செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட சின்னசாமி பேட்டியளித்துள்ளார்.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த 2ஆம் தேதி ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு எடப்பாடி-பன்னீர் பெயரில் கூட்டாக ஒரு அறிக்கை வெளியானது. அதில் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க செயலாளர் பதவியிலிருந்து ஆர்.சின்னசாமி நீக்கப்படுவதாகவும், அந்தப் பொறுப்பிற்கு புதிதாக ஒருவர் நியமிக்கப்படும் வரை பேரவை பணிகளைக் கவனிக்க யு.ஆர்.கிருஷ்ணன், தாடி. ம.இராசு, க.சங்கரதாஸ் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினகரன் அணியிலிருக்கும் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் நெருக்கமாக இருந்து போக்குவரத்து வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதுதான் சின்னசாமி நீக்கத்திற்கான காரணம் என்ற தகவலும் வெளியாகியது.

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சின்னசாமி, "என்னை அண்ணா பேரவை செயலாளர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கினார்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து என்னிடம் அவர்கள் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. என்னை நீக்கும் தினத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம் வேறொரு விஷயமாக நான் சென்று பேசுகிறேன், நீங்கள்தான் எல்லாம் செய்ய வேண்டும் என்று எனக்கு கைக்கொடுத்து அனுப்புகிறார். அதற்கு முன்தினம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசுகிறேன், நீங்கள்தான் சீனியர் நீங்கள் செய்தால் சரிதான் என்று கூறுகிறார்" என்று குறிப்பிட்டார்.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் நான் கலந்துகொண்டேன். வீட்டிற்கு வந்தால் நான் நீக்கப்பட்டேன் என்று தொலைக்காட்சிகளில் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்லும் நிலைமையில் இல்லை. எனக்கு மொத்தத்தில் ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் துரோகம் செய்துவிட்டனர்" என்று வேதனையுடன் கூறினார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 5 பிப் 2018