மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

சுகாதாரத் திட்டத்துக்கு ரூ.1 லட்சம் கோடி தேவை!

சுகாதாரத் திட்டத்துக்கு ரூ.1 லட்சம் கோடி தேவை!

மத்திய அரசின் மெகா சுகாதாரத் திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி தேவைப்படுவதாக பொது நிதி மற்றும் கொள்கைக்கான தேசிய நிறுவனத்தின் (என்.ஐ.பி.எஃப்.பி.) ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 'பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பொது சுகாதார பாதுகாப்புத் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. இத்திட்டத்தின்படி நாட்டில் உள்ள 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.5 லட்சம் வரை இலவசக் காப்பீடு சேவை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1 லட்சம் கோடி வரை தேவைப்படும். மத்திய, மாநில அரசுகள் இரண்டுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி தேவைப்படும். இத்திட்டத்தின்படி 60 சதவிகித தொகைக்கு மத்திய அரசும், எஞ்சிய 40 சதவிகித தொகைக்கு மாநில / யூனியன் பிரதேச அரசுகளும் பொறுப்பேற்கும். இதனால் மத்திய அரசுக்கு இத்திட்டத்தைச் செயல்படுத்த ரூ.60,000 கோடி தேவைப்படும்.'

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

திங்கள் 5 பிப் 2018