மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

ஐசிசி அணியில் இடம் பெற்ற இந்திய வீரர்கள்!

ஐசிசி அணியில் இடம் பெற்ற இந்திய வீரர்கள்!

நியூசிலாந்தில் நடைபெற்று முடிந்த ஜூனியர் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை தேர்வு செய்து பெயர் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை தொடர் கடந்த மாதம் முதல் நியூசிலாந்தில் நடைபெற்று வந்தது. அதில் லீக் போட்டிகள் மட்டுமின்றி பிளே-ஆஃப்பிலும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி நான்காவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது.

இந்நிலையில் ஐசிசி இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு ஒரு அணியை அறிவித்துள்ளது. அதில் இந்திய வீரர்கள் 5 பேர் இடம் பெற்றுள்ளனர். தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரெய்னார்ட் வான் தொன்டர் (348) தலைமையில் 12 பேர் கொண்ட அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அதில் இந்திய தொடக்க வீரர்கள் ப்ரித்வி ஷா (261), மன்ஜோட் கல்ரா (252), சுப்மன் கில் (372) மூவரும், வேகப்பந்து வீச்சாளர் அனுகுல் ராய் (14 விக்கெட்கள்), மற்றும் கமலேஷ் நகர்கொடி (9) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணி சார்பில் 5 வீரர்கள் தேர்வாகி உள்ளது சிறப்பான ஒன்று.

அதேபோல் தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் ரெய்னார்ட் வான் தொன்டர் மட்டுமின்றி அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸீ (8 விக்கெட்டுகள்), விக்கெட் கீப்பர் வாண்டில் மக்வெட் (184, 11 டிஸ்மிசல்) ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்கா அணி இறுதிப்போட்டிக்குள் நுழையவில்லை என்றாலும் காலிறுதி வரை சிறப்பாக விளையாடியது.

இந்த அணியில் நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன் (338), ஆப்கானிஸ்தான் வீரர் கைஸ் அஹமத் (14), பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி (12) மற்றும் வேஸ்ட் இண்டீஸ் வீரர் அலைக் அதனாஜ் (418) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

திங்கள் 5 பிப் 2018