மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

காவிரி வறண்டுபோக பாஜகவே காரணம்!

காவிரி வறண்டுபோக பாஜகவே காரணம்!

காவேரி டெல்டா பகுதிகளில் பயிர்கள் கருகுவதற்குக் காரணமே பாஜக ஆட்சிதான் என்று கூறியுள்ளார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்.

தர்மபுரியில் இன்று (பிப்ரவரி 5) நடைபெற்ற திமுக நிர்வாகி மனோகரன் இல்ல விழாவில் கலந்துகொண்டார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். அதன்பின், அவர் அப்பகுதியிலுள்ள கேஆர்பி அணையைப் பார்வையிட்டார். சமீபத்தில், இந்த அணையில் உடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தார். இதன் முடிவில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, கேஆர்பி அணைக்காகச் செலவிடப்பட்ட ரூ.2 கோடி எங்கு போனது என்று அவர் கேள்வி எழுப்பினார். அணையிலுள்ள நீர் வீணானதால் சுமார் 15,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் முதல் போகம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். மேலும், தற்காலிகமாகச் செயல்பட்டுவரும் 8 ஷட்டர்களையும் உடனடியாகப் புதுப்பிக்க வேண்டுமென்றார்.

திமுக ஆட்சியின்போது ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை, அதிமுக அரசு போட்டதென்று குற்றம்சாட்டினார் ஸ்டாலின். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் காணொளிக் காட்சி மூலம் இத்திட்டம் தொடங்கப்பட்டதே தவிர, இப்போதுவரை இப்பகுதி மக்கள் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரை கண்ணால் காணமுடியாத நிலையே தொடர்வதாகக் கூறினார். .

”இன்றைய தினம் பர்கூர் தொகுதியில் உள்ள அங்கிநாயக்கன் பள்ளி என்ற பகுதிக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டேன். ஆகவே, இந்த அரசு உடனடியாக செயல்பட்டு, எங்கெல்லாம் இணைப்புகள் வழங்கப்படாமல் இருக்கிறதோ, அந்த கிராமங்களில் எல்லாம் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். இந்தப் பணிகளை குதிரை பேர அரசு விரைவில் மேற்கொள்ளாவிட்டாலும், விரைவில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வரும்போது, திமுக ஆட்சியில் அமர்ந்து இந்தப் பணிகளை விரைந்து நிறைவேற்றும்” என்று தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தில் இருந்துவரும் கழிவுநீர் அணையில் கலப்பதால் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அந்தக் கழிவுநீரை சுத்திகரிக்க முகத்துவாரத்தில் ஒரு திட்டத்தை உடனடியாக உருவாக்க வேண்டுமென்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 5 பிப் 2018