மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் பசுவின் கோமியம்!

ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் பசுவின் கோமியம்!

உத்தரப் பிரதேச அரசு, பசுவின் கோமியத்தைக் கொண்டு மூட்டுவலி, கல்லீரல் நோய், நோய் எதிர்ப்புக் குறைபாடு போன்ற நோய்களைக் குணமாக்கும் மருந்துகளைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் பசுவின் கோமியத்துக்கு முக்கியத்துவம் அளித்து அதிக அளவில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இம்மாநிலத்தில் ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் பசுவின் கோமியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது. மாநிலத்தின் ஆயுர்வேதத் துறையின் சார்பில், கோமியத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, பசுவின் கோமியத்தை வைத்து தரையைச் சுத்தம் செய்யும் கிளீனரைத் தயாரிக்க முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து பசுவின் கோமியத்தை மேலும் அதிக அளவில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநில ஆயுர்வேதத் துறை இயக்குநர் மருத்துவர் ஆர்.ஆர். சவுத்ரி லக்னோவில் நேற்று(பிப்ரவரி 4) கூறியதாவது:

"ஆயுர்வேத மருத்துவத்தில் பசுவின் கோமியமும் ஒருங்கிணைந்த பகுதியாக விளங்குகிறது. பசுவின் கோமியம் மிகச் சிறந்த கிருமி நாசினியாக உள்ளது. இதன் காரணமாக நோய்க்கிருமிகள் பரவாமல் தடுக்க வீடுகளில் கோமியம் தெளிக்கப்படுகிறது. அதேபோல் பசுவின் பால், தயிர், நெய் ஆகியவையும் மருத்துவக் குணங்கள் வாய்ந்தவை.

ஆயுர்வேதத் துறை சார்பில் பால், கோமியம் உள்படப் பசுவிடமிருந்து கிடைக்கும் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட 8 மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இதுவரை மூட்டுவலி, கல்லீரல் நோய், உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்றவற்றிற்கு பசுக் கோமியத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துகள் வழங்கப்பட்டுவருகின்றன. இனி வேறு பல நோய்களுக்கான மருந்து தயாரிப்பிலும் பசுக் கோமியத்தைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 5 பிப் 2018