மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

சிபிஎஸ்இ: மதிப்பீட்டு முறையில் மாற்றம்!

சிபிஎஸ்இ: மதிப்பீட்டு முறையில் மாற்றம்!

குழந்தைகள் பாதுகாப்பு வாரியத்தின் நடவடிக்கையால், பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஒரே மாதிரியான தேர்வு நடைமுறை, மதிப்பீட்டு முறை என்ற அறிவிப்பை சிபிஎஸ்இ வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.

பள்ளிகளில், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை, ஒரே மாதிரியான தேர்வு முறை மற்றும் மதிப்பீட்டு முறையை அமல்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்தது. அதன்படி, 6ஆம் வகுப்பில் இருந்தே மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் 80%மதிப்பெண்கள் தேர்வு அடிப்படையிலும், 20% மதிப்பெண்கள் பள்ளி அளவிலும் வழங்கி மதிப்பெண் பட்டியலைத் தயார் செய்யத் திட்டமிட்டது. அதற்கான சுற்றறிக்கையும் சிபிஎஸ்இ சார்பில் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டன.

இதற்கு, பெற்றோர், மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும், மாணவர்களின் தன்னம்பிக்கையையும், திறனையும் மேம்படுத்துவதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் சிபிஎஸ்இ விளக்கமளித்தது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 5 பிப் 2018