மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

அம்மனுக்குச் சுடிதார்!

அம்மனுக்குச் சுடிதார்!

மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் ஆலயத்தில் அபயாம்பிகை அம்மனுக்குச் சுடிதார் அணிவித்து பூஜை செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில் மயூரநாதர் ஆலயம் உள்ளது. இங்கு மயூரநாதர் சுவாமி லிங்க வடிவிலும், அபயாம்பிகை தனி சன்னிதியிலும் அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயில் திருவாவடுதுறை ஆதினத்துக்குச் சொந்தமானது. குருமூர்த்தி என்பவர் கோயில் நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார்.

தினசரி அபயாம்பிகைக்கு ஆறு கால பூஜை நடைபெறுவது வழக்கம். கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தைவெள்ளியன்று அம்மனுக்குச் சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டன. அன்று மாலை சந்தன அலங்கார பூஜை நடைபெற்றது.

அப்போது அம்மனுக்கு வழக்கமாக அணிவிக்கும் உடையைத் தவிர்த்து ராஜ் என்ற அர்ச்சகர் சுடிதார் அணிவித்து பூஜை செய்துள்ளார். நவீன காலத்தில் அம்மனுக்கும் சுடிதார் அணிவிக்கப்பட்டது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயிலில் அம்மனைப் புகைப்படம் எடுக்கத் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையிலும் சிலர் சுடிதாரில் இருந்த அம்மனைப் புகைப்படம், வீடியோ எடுத்து நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ளனர். தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மயூரநாதர் கோயிலில் அபயாம்பிகைக்கு சுடிதார் அணிவித்து பூஜை செய்தது மிகவும் கண்டிக்கத் தக்கது என்றும், திருவாவடுதுறை ஆதீனம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 5 பிப் 2018