மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

குறைவாக வரி செலுத்தி ஏய்க்கும் பெரு நிறுவனங்கள்!

குறைவாக வரி செலுத்தி ஏய்க்கும் பெரு நிறுவனங்கள்!

2016-17ஆம் நிதியாண்டில் இந்தியாவில் மிகவும் பணக்கார பெரு நிறுவனங்கள் செலுத்திய வரிவிகிதம் சிறு நிறுவனங்களின் அளவை விடக் குறைவாக உள்ளது.

2016-17ஆம் நிதியாண்டில் இந்தியாவில் அதிக லாபமீட்டிய பெரும்பணக்கார நிறுவனங்கள் வரி செலுத்தியுள்ள விகிதாச்சாரம் 23.9 சதவிகிதமாக மட்டுமேயுள்ளது. இது அவர்கள் செலுத்தியிருக்க வேண்டிய விகிதாச்சாரத்தை விட 10.7 சதவிகிதம் குறைவாகும். இந்நிறுவனங்கள் 2016-17ஆம் நிதியாண்டில் 34.6 சதவிகித வரியைச் செலுத்தியிருக்க வேண்டும். இந்தப் பட்டியலில் சுமார் 355 நிறுவனங்கள் வரையுள்ளன. இந்நிறுவனங்கள் 2016-17ஆம் நிதியாண்டில் வரி செலுத்துவதற்கு முன்பு அளித்த அறிக்கைகளின் படி ரூ.5000 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டியுள்ளன. ரூ.500 கோடிக்கும் குறைவான லாபமீட்டிய நிறுவனங்கள் 29 சதவிகித வரி செலுத்தியுள்ளன.

வருமான வரித் துறையின் அறிக்கைகளில், "2017 நவம்பர் 30 வரையிலான காலத்திற்குள் 6.01 லட்சம் நிறுவனங்கள் வரித்தாக்கல் செய்துள்ளன. வரி செலுத்தியுள்ள மொத்த நிறுவனங்களில் 70 சதவிகித நிறுவனங்கள் 30 சதவிகித வரிவிதிப்புக்கும் குறைவான அளவிலேயே வரி செலுத்தியுள்ளன. 17 சதவிகித நிறுவனங்கள் 30 முதல் 33 சதவிகித வரிவிதிப்பு வளையத்திற்குள்ளும், 6 சதவிகித நிறுவனங்கள் 33 சதவிகிதத்திற்கும் அதிகமான வரி வளையத்திற்குள்ளும் வந்துள்ளன" என்று கூறப்பட்டுள்ளது.

2015-16ஆம் நிதியாண்டைப் பொறுத்தவரையில் அதிக லாபமீட்டிய பெரு நிறுவனங்கள் 25.9 சதவிகித வரியையும், ரூ.100 கோடிக்கும் குறைவான லாபமீட்டிய நிறுவனங்கள் 30 சதவிகித வரியையும் செலுத்தியுள்ளன. மற்ற துறைகளைக் காட்டிலும் உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்கள் கூடுதல் வரிச்சலுகையைப் பெற்றுள்ளன. பெருநிறுவனங்களைக் காட்டிலும் சிறு நிறுவனங்களே வரி செலுத்துவது தொடர்பான சட்ட விதிமுறைகளைக் கூடுதலாக பின்பற்றியுள்ளன. இந்தத் தகவல்கள் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கை மற்றும் வருமான வரித்துறையின் அறிக்கைகள் மூலம் நமக்குத் தெரிய வருகிறது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

திங்கள் 5 பிப் 2018