மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

போராட்டம் : உறுதிசெய்த தயாரிப்பாளர்கள் சங்கம்!

போராட்டம் :  உறுதிசெய்த தயாரிப்பாளர்கள் சங்கம்!

மார்ச் 1ஆம் தேதியிலிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

திரையரங்குகளில் படங்களை டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பும் QUBE மற்றும் UFO நிறுவனங்கள் அதிகமான கட்டணம் வசூலிப்பதாக தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் போராட்டத்தை அறிவித்தது. அதன்படி மார்ச் 1ஆம் தேதியிலிருந்து எந்தப் படத்தையும் வெளியிடப்போவதில்லை என்று முடிவெடுத்து தமிழ், கன்னட, மலையாளத் தயாரிப்பாளர் சங்கங்களையும் அணுகி தங்களது போராட்டத்துக்கு ஆதரவு கேட்டது. இந்நிலையில் விஷால் தலைமையில் நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டத்தில் தெலுங்குத் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக மார்ச் மாதம் எந்தப் படத்தையும் வெளியிட வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக திரையுலகில் மீண்டும் போராட்டம்! என்ற தலைப்பில் காலை 7மணி பதிப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது இந்த முடிவை தயாரிப்பாளர்கள் சங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 5 பிப் 2018