மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

வேளாண் பட்ஜெட் மகிழ்ச்சியளிக்கவில்லை!

வேளாண் பட்ஜெட் மகிழ்ச்சியளிக்கவில்லை!

புதிய பட்ஜெட்டில் உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையுயர்வு மகாராஷ்டிர மாநில விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

2018-19 நிதியாண்டுக்கான புதிய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியால் தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் புதிய பட்ஜெட்டில் விவசாயிகளைக் கவரும் வகையில் குறைந்தபட்ச ஆதார விலை 1.5 மடங்கு உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா, ஹரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த காரிஃப் பருவத்தில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் கடும் இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் இந்நடவடிக்கை எந்த மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை என்று மகாராஷ்டிர விவசாயிகள் கூறுகின்றனர்.

காரிஃப் பருவ பயிர் இழப்பைப் பொறுத்தவரையில் மகாராஷ்டிர மாநில விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியிருந்தது. பல்வேறு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். வேளாண்துறை ஆராய்ச்சியாளர் சந்தீப் வேம்பதி இதுபற்றி பிசினஸ் லைன் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், "குறைந்தபட்ச ஆதார விலையைப் பொறுத்தவரையில் ஒரே விலை எல்லா மாநிலத்துக்கும் பொருத்தமாகாது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் உற்பத்தி செலவுகள், மண் வளம் ஆகியவை வேறுபடுகின்றன. எனவே ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ற வகையில் ஆராய்ந்து உரிய ஆதார விலையை வழங்க வேண்டியுள்ளது" என்றார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 5 பிப் 2018