மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதில்லை!

இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதில்லை!

இந்தியாவில் நோய் எதிர்ப்புக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் மக்களுக்கு முறையாக கிடைப்பதில்லை என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள நியூகேஸ்டல் பல்கலைக்கழகம், மும்பையைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான லக்ஷயா மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்தியாவில் மக்களின் அத்தியாவசிய மாத்திரைகளின் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் குளோபல் ஹெல்த் என்னும் பத்திரிகையில் ஜனவரி 27அன்று வெளியானது.

அந்த ஆய்வில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 124 தனியார் மருந்தகங்களைச் சோதனையிட்ட போது, அங்கு அனுமதியளிக்கப்பட்ட 6 அத்தியாவசிய மாத்திரைகள் மட்டுமே விற்பனை செய்து வருவது கண்டறியப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட பல தயாரிப்புகள் இருந்தபோதிலும், விலை மலிவாக உள்ள ஒரு சில அத்தியாவசிய மருந்துகளை மட்டுமே மருந்தகங்களில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

இது குறித்து நியூகேஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர்.கோலின் மில்லார்ட் பிடிஐ ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “ இந்தியாவில் 2015ஆம் ஆண்டு 376 மருந்துகள், அத்தியாவசிய மருந்துகளாக அறிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் இந்தியா முழுவதும் உள்ள சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பரவலாக கிடைக்க வேண்டும். அரசு சுகாதார நிலையங்களில் இதன் தட்டுப்பாடு காரணமாக மக்கள் அதிக விலை கொண்ட தனியார் மருந்தகங்களை நாடுகின்றனர்.

மகாராஷ்டிரா, மும்பை, நாக்பூரிலுள்ள 124 தனியார் மருந்தகங்களைச் சோதனையிட்ட போது, அங்கு அனுமதியளிக்கப்பட்ட அர்தெமிசினின் (மலேரியா), லாமிவுடின் (ஏச்.ஐ.வி), ரிஃபாம்பிசின் (டியூபர்க்லோசிஸ்), ஆக்சிடோசின் (இனப்பெருக்க ஆரோக்கியம்), ப்ளூஆக்சிடைன் (மனநல ஆரோக்கியம்), மெட்போர்மின் (நீரிழிவு) ஆகிய 6 அத்தியாவசிய மாத்திரைகள் மட்டுமே விற்பனை செய்து வருவது கண்டறியப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 5 பிப் 2018