மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

தமிழகத்தில் தமிழுக்குத் தடையா ?

தமிழகத்தில் தமிழுக்குத்  தடையா ?

"தேசிய ஒருமைப்பாட்டை பின்பற்றும் இந்தியாவில் அந்தந்த மொழிகளை பயன்படுத்த அந்தந்த மாநிலங்களுக்கு உரிமையில்லையா? இதுதான் தேசிய ஒருமைப்பாடா ? என திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுள்ளார்.

உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டதால் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க முடியாது என மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் பி.பி சவுத்ரி நேற்று முன்தினம் தெரிவித்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்

,

இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியை வழக்காடு மொழியாக வைத்துக் கொள்ளலாம். அப்போது தான் அங்கே இருப்பவர்களுக்கு என்ன வாதாடுகிறார்கள் என்பது புரியும். ஆனால் தமிழ் பேசும் தமிழ்நாட்டில் இந்தியை வழக்காடு மொழியாக கட்டாயப் படுத்த வேண்டியதன் அவசியம் என்ன? என்றவர் இந்த தடை எப்படி வந்தது என்பதையும் தன்அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இடைக்காலத்தில் தமிழிலும் வாதாடலாம் என்ற நிலை தான் தமிழ்நாட்டில் இருந்து வந்தது. அன்றைய தலைமை நீதிபதி ஏ.பி.ஷா அதற்கு துணையாகவும் இருந்தார். மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தமிழில் வாதாட நீதிபதி மணிக்குமார் அனுமதியும் வழங்கினார். பிறகு வந்த தலைமை நீதிபதிதான் அதற்கு தடை போட்டார். வட மாநிலங்களில் அவர்களது மொழியை வழக்காடு மொழியாக அனுமதித்துள்ளவர்கள் இங்கே தமிழை மறுப்பது ஏன் ? இந்திய தேசியம் என்றால் இந்தி பேசுபவர்கள் மட்டும் தான் , தமிழுக்கு இடமில்லை என சொல்லப்பட்டுள்ளதா என்று கேள்வி கேட்டுள்ளார்.

மேலும் தேசிய ஒருமைப்பாடு என்பது இந்தியர்களுக்கானதா ? இல்லை இந்தி பேசுபவர்களுக்கு மட்டுமானதா என்பதையும் தேசியம் பேசுபவர்கள் தெளிவுப்படுத்த வேண்டுமெனவும் வீரமணி குறிப்பிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

திங்கள் 5 பிப் 2018