மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

மீனவர்கள் உரிமையை தாரைவார்க்கக் கூடாது!

மீனவர்கள் உரிமையை தாரைவார்க்கக் கூடாது!

மீனவர்கள் நாட்டுப்படகில் சென்று கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

வருடந்தோறும் கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா கொண்டாடப்படும் வரும் நிலையில், இந்த வருடத்திற்கான திருவிழா வரும் 23, 24ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொள்ள நாட்டுப்படகில் செல்ல கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த வருடத் திருவிழாவிற்காவது நாட்டுப் படகில் குடும்பத்துடன் செல்ல அனுமதியளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்டோரிடம் மீனவர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இவ்வருடமும் கச்சத்தீவு விழாவுக்குத் தமிழக மீனவர்கள் நாட்டுப்படகில் செல்ல ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "கச்சத்தீவு ராமேஸ்வரத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் இருப்பதால் அவ்வளவு தூரம் நாட்டுப்படகில் சென்று திரும்புவது பாதுகாப்பானதாக இருக்காது என்று கூறிதான் தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மீனவர்களின் வாதப்படி விசைப்படகுக்கும், நாட்டுப்படகுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. பாதுகாப்பு வசதிகளைப் பொறுத்தவரை இரு படகுகளுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை அல்ல என்பது தான் மீனவர்கள் சொல்லும் உண்மை" என்று குறிப்பிட்டுள்ளார்.

"அந்தோணியார் விழாவில் பங்கேற்க நாட்டுப்படகுகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதன் மூலம் கச்சத்தீவுக்கு பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப்படகில் எந்தவித அனுமதிச் சீட்டும் இல்லாமல் சென்று வர கச்சத்தீவு ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமை தாரை வார்க்கப்பட்டிருக்கிறது, என்று குற்றம் சாட்டிய ராமதாஸ், மீனவர்களின் உரிமை பறிக்கப்படுவதற்கு தமிழக அரசே துணை போகிறது. இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீட்டுப் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப்படகில் சென்று பங்கேற்கவும், அதன் மூலம் அவர்களின் உரிமையை உறுதி செய்யவும் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு நாட்டுப்படகில் செல்லப் போட்டிருக்கும் தடையை உடனடியாக நீக்க வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்த விதிகளுக்கு மாறாக இந்தத் தடை அமைந்திருப்பதால், நாளை நாட்டுப்படகில் சென்று மீன்பிடிக்கவும் தடையாக மாறிவிடும் ஆபத்திருப்பதை அரசுக்கு உணர்த்துகிறோம். கச்சத்தீவு ஒப்பந்தத்தையே காலாவதியாக்கி, மீன்பிடித் தொழிலையே கைவிடச் செய்யும் இந்திய-இலங்கை கூட்டுச் சதியும் இதில் தெரிவதால், தமிழக அரசு இதற்குத் துணைபோய்விடக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 5 பிப் 2018