மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

வாய்ப்பை தவறவிட்ட கோவா!

வாய்ப்பை தவறவிட்ட கோவா!

ஐ.எஸ்.எல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கோவா மற்றும் நார்த் ஈஸ்ட் அணிகள் மோதிய போட்டி சமனில் முடிவடைந்தது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று (பிப்ரவரி 4) கோவாவில் நடைபெற்ற 64-வது லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா - நார்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணிகள் மோதின. அதில் முதல் பாதியின் 42 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் மந்தர் ராவ் முதல் கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து நார்த் ஈஸ்ட் யூனைடெட் அணியின் மர்சின்ஹோவும் 45ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்ததால் போட்டி சமனில் இருந்தது.

அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் இரண்டு அணி வீரர்களும் சரிசமமான கோல் வாய்ப்புகளை பெற்றனர். அதில் 53ஆவது நிமிடத்தில் கோவா அணியின் பெர்ரான் கொரொமினஸ் 2ஆவது கோல் அடித்து அணியை 2-1 என முன்னிலை பெற செய்தார். அவரைத் தொடர்ந்து நார்த் ஈஸ்ட் அணி வீரர் டொவ்கல் அசிஸ்ட் செய்து ஜான் மொச்கூரா 71ஆவது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்து 2-2 என சமன் செய்தார்.

இந்த போட்டி சமனில் முடிந்ததால் முதல் நான்கு இடங்களுக்குள் கோவா அணி இடம்பெற முடியவில்லை. 20 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் உள்ள கோவா அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றிருந்தார். 23 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கும். ஆனால் அந்த வாய்ப்பினை தவறவிட்டுள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 5 பிப் 2018