மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

எனது கருத்து தவறாகப் பரப்பப்பட்டுள்ளது!

எனது கருத்து தவறாகப் பரப்பப்பட்டுள்ளது!

அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று நான் கூறியதாக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் நேற்று நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக உறுப்பினர் அட்டை என்பது உயிர் போன்றது. உறுப்பினர் அட்டைதான் நமது அங்கீகாரம். அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் அரசாங்கத்திலோ வேறு வகையிலோ உதவி பெற்றுத்தர முடியும் என்று கூறியிருந்தார். இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்கும் உள்ளானது.

இந்நிலையில் தன்னுடைய பேச்சு தவறாக பரப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார். மதுரையில் இன்று (பிப்ரவரி 5) செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைத்துச் சமுதாய மக்களுக்கும் நலத்திட்டங்கள் கிடைப்பது அதிமுக ஆட்சியில் மட்டும்தான். உறுப்பினர் அட்டையே இல்லாமல், நான் அதிமுக உறுப்பினர் என்று சிலர் கூறுவதால்தான் நான் அப்படிச் சொன்னேன். அது தவறான முறையில் பரப்பப்ட்டுள்ளது" என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், "பழைய உறுப்பினர்கள் எங்களிடம் உறுப்பினர் அட்டை உள்ளது என்று புதுப்பிக்காமல் சென்றுவிடுவார்கள், அவர்களும் உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் என்பதால்தான் எங்களுடைய மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அப்படிக் கூறினேன். அதிமுக உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து ஏதாவது உதவி பெற விரும்பினால் அதற்கு நாங்கள் உதவ வேண்டி இருந்தால் அதிமுக அட்டை வேண்டும் என்றுதான் கூறினேன். ஆனால் என்னுடைய கருத்து ஊடகங்களில் தவறான முறையில் பரப்பப்பட்டுள்ளது . அது தவறான தகவலாகும்" என்றும் விளக்கம் கூறினார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

திங்கள் 5 பிப் 2018