மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

3.1 சதவிகிதமாக தொடரும் நிதிப்பற்றாக்குறை!

3.1 சதவிகிதமாக தொடரும் நிதிப்பற்றாக்குறை!

2019-20 நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை 3 சதவிகிதமாக இருக்குமென்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் கார்க் தெரிவித்துள்ளார்.

2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி நிதி அமைச்சர் அருண் ஜேட்லியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து பிசினஸ் லைன் ஊடகத்துக்கு சுபாஷ் கார்க் பேட்டியளித்துள்ளார். 2018-19 மத்திய பட்ஜெட் கார்பரேட் கடனை வசூலித்தல், ரகசிய நாணய முதலீடுகளை ரத்து செய்தல் போன்ற திட்டங்களை கொண்டிருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் ஃபிட்ச் ரேட்டிங்க்ஸ் உள்ளிட்ட ஆய்வுகள் நிதியாண்டு இலக்கை அடைவதற்கான ஒருங்கிணைப்பு குறித்த சந்தேகத்தை எழுப்புகின்றன. 3 சதவிகிதமாக உள்ள நிதிப்பற்றாக்குறை 2020-21 வரை தொடரும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஆய்வுகள் எழுப்பும் ஐயப்பாடுகள் சரியானது தானா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "அது நிதிப் பற்றாக்குறையை நீக்க நாம் நிர்ணயித்துள்ள இலக்கு. நிதிப் பற்றாக்குறை 2019-20 நிதியாண்டில் 3.1 சதவிகிதமாக இருக்கும். அடுத்த நிதியாண்டிலும் கிட்டத்தட்ட இதற்குச் சமமான அளவிலேயே நிதிப் பற்றாக்குறை நீடிக்கும். இதேநிலை நீண்ட காலத்திற்கு தொடராது. மத்திய அரசு கடந்த ஒரு வருடத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த 12-13 வருடங்களில் நிதிப்பற்றாக்குறை 2006-070ஆம் நிதியாண்டைத் தவிர மற்ற வருடங்களில் 30 சதவிகிதத்தை நெருங்கியதே இல்லை" என்றார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 5 பிப் 2018