சென்னையில் அமெரிக்க டாலர்கள் பறிமுதல்!


சென்னையிலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.8 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் இன்று (பிப்ரவரி 5) சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையியிருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கு இன்று காலை பயணிகள் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அதில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, இரண்டு பயணிகளின் பெல்ட்களில் சந்தேகப்படும்படியான பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெல்ட்களைப் பிரித்துப் பார்த்தபோது, அவற்றில் ரூ.8 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் இருந்தது. அவற்றை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் வெளிநாட்டுக் கரன்சிகளைக் கடத்த முயன்ற அந்த இரண்டு பயணிகளையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து சுங்கத் துறை அதிகாரி ஒருவர், “பயணிகளிடம் சோதனை நடைபெறுவது வழக்கம். இன்று சோதனையின்போது இரண்டு பயணிகளிடமிருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுக் கரன்சிகள் கிடைத்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது” என்று தெரிவித்துள்ளார்.