மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

பத்மாவத்: போராட்டம் வாபஸ் இல்லை!

பத்மாவத்: போராட்டம் வாபஸ் இல்லை!

'பத்மாவத்' படத்துக்கு எதிரான போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று தெரிவித்துள்ளார் கர்னி சேனா தலைவர் லோகேந்திர சிங் கால்வி.

ராஜபுத்திர வம்சத்தையும், ராணி பத்மாவதியையும் இழிவுப்படுத்துவதாகக் கூறி கர்னி சேனா அமைப்பினர் படப்பிடிப்பு நடந்தபோது ரகளையில் ஈடுபட்டு 'பத்மாவத்' பட இயக்குநர் சஞ்சய்லீலா பன்சாலியைத் தாக்கிப் பொருட்களைச் சூறையாடினர். ராணி பத்மாவதி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனின் நாக்கை வெட்டினால் ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தனர். ஆனால் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து 'பத்மாவத்' படம் சமீபத்தில் வெளியானது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் கர்னி சேனா அமைப்பினர் கலவரம் செய்தனர். வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. பள்ளிக் குழந்தைகள் சென்ற வேன் மீது கற்கள் வீசப்பட்டன. இந்த நிலையில் 'பத்மாவத்' படத்துக்கு எதிரான போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கர்னி சேனா அமைப்பினர் அறிவித்ததாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தகவல்கள் வந்தன. இந்தத் தகவலை ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் நிறுவனத் தலைவர் லோகேந்திர சிங் மறுத்துள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

திங்கள் 5 பிப் 2018