மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்!

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்!

இந்தியாவின் எல்லை பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தாக்குதலில் 15 வயது சிறுமி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்திய எல்லை பகுதியில் அத்துமீறித் தாக்குதல் நடத்திவருகிறது. இதன் காரணமாக ஜம்மு-காஷ்மீர் பகுதி எப்போதும் பதற்றமாகவே காணப்படும். இந்நிலையில், இந்திய எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்திவருகிறார்கள். இந்தத் தாக்குதலில் இந்திய வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்தனர்.

இதற்கு இந்திய ராணுவத்தினர் கொடுத்த பதிலடியில், பாகிஸ்தான் வீரர்களும் உயிரிழந்தனர். இந்தியாவின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் தற்போது மீண்டும் அத்துமீறிய தாக்குதலை நடத்துகிறார்கள்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று(பிப்ரவரி 4) அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்கள் தங்கியிருந்த நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இஸ்லாமாபாத்தின் ஷாபூர் கிராமத்தைச் சேர்ந்த ஷானாஸ் பானு (வயது 15), என்ற சிறுமி படுகாயம் அடைந்தார்.

பின்னர் காயமடைந்த சிறுமியை மீட்டு இந்திய ராணுவத்தினர் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்ந்தனர். இதையடுத்து, சிறுமிக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்ததாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

திங்கள் 5 பிப் 2018