மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

கமலின் முதல் பொதுக்கூட்டம்!

கமலின் முதல் பொதுக்கூட்டம்!

'நடிகர் கமல்ஹாசனின் முதல் பொதுக்கூட்டம் பிப்ரவரி 21 ஆம் தேதி மதுரையில் நடைபெறும்' என்று அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்க பொறுப்பாளர் தங்கவேலு கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் ஆளும் அதிமுக அரசை எதிர்த்து கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது அரசியல் வருகையை உறுதி செய்தார். இதையடுத்து தனது நற்பணி மன்ற நிர்வாகிகளுடன், தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்த கமல்ஹாசன், தனது அரசியல் பயணமான "நாளை நமதே" பயணத்தை பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தார். மேலும் , ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் வீட்டிலிருந்து தனது பயணத்தை துவங்க இருப்பாதாகவும் தெரிவித்திருந்தார்.

அன்றைய தினம் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சி பெயர் மற்றும் கொடி உள்ளிட்டவற்றை கமல் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 4) அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்க பொறுப்பாளர் தங்கவேலு, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து “நாளை நமதே’ என்ற பயணத்தை பிப்ரவரி 21 ஆம் தேதி கமல்ஹாசன் தொடங்குகிறார் என்றும் கமலின் முதல் பொதுக்கூட்டம் பிப்ரவரி 21 ஆம் தேதி மாலை மதுரையில் நடைபெறும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 5 பிப் 2018