மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

ஏமாற்றமளித்த பி.வி.சிந்து!

ஏமாற்றமளித்த பி.வி.சிந்து!

இந்தியன் ஓப்பன் பேட்மிண்டன் தொடரில் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்.

இந்தியன் ஓப்பன் பேட்மிண்டன் லீக் கடந்த புதன்கிழமை (ஜனவரி 31) தொடங்கியது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை தவிர மற்ற இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னரே தொடரிலிருந்து வெளியேறினர்.

எனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த பி.வி.சிந்து மீது இந்திய ரசிகர்கள் முழு நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் நேற்று (பிப்ரவரி 4) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து தோல்வியைத் தழுவியது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து, அமெரிக்காவின் பிவிவென் ஜாங் உடன் மோதினார். அதில் முதல் செட்டினை 21-18 என பிவிவென் ஜாங் கைப்பற்றினார். ஆனால் இரண்டாவது செட்டில் சிறப்பாக விளையாடிய சிந்து 21-11 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று போட்டியை சமன் செய்தார்.

எனவே வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் சிந்து தோல்வியைத் தவிர்க்க போராடினார். இருவரும் சரிசமமாக விளையாடியதால் இந்த செட் நீண்ட நேரம் நடைபெற்றது. இருப்பினும் 22-20 என்ற செட் கணக்கில் பிவிவென் ஜாங் மூன்றாவது செட்டினை கைப்பற்றி போட்டியை இந்தியன் ஓப்பன் லீக்கின் பட்டத்தை வென்றார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 5 பிப் 2018