மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

மருத்துவ மாணவர் தற்கொலை!

மருத்துவ மாணவர் தற்கொலை!

கிருமாம்பாக்கத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை மாவட்டம் ராம்நாடு தேவிபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ஜிம்ஸ்ஷாம்காட்(வயது22). இவர் புதுச்சேரி மாநிலம் வில்லியனுரை அடுத்த உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். முதலில் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த ஷாம், பிறகு கிருமாம்பாக்கம் அருகே பெலிக்கான்சிட்டி குடியிருப்பில் வாடகை வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்குச் சென்று படித்து வந்தார்.

இந்நிலையில் வாடகை வீட்டில் தனியாக தங்கி வந்த ஷாம் கடந்த 28 ஆம் தேதி வீட்டு ஜன்னலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். அப்போது அவருடைய நண்பர்கள் பார்த்து, ஷாம்மை மீட்டு பிள்ளையார்க்குப்பதில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தார்கள். அங்கு ஷாம் சிகிச்சை பெற்றார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். கடந்த 6 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த ஷாம் நேற்றுமுன்தினம்(பிப்ரவரி 3) இரவு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார். பின்னர் நேற்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஷாம்மின் உடல் பிரேதபரிசோதனை செய்து, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று ஷாமின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து அவரது நண்பர்கள் கொடுத்த புகாரில் பேரில் கிருமாம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாணவர் ஷாம் தங்கியிருந்த வீட்டில் விசாரணை நடத்தினர்.

மேலும் ஷாம் காதல் தோல்வியில் இறந்தாரா: அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா: என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஷாமின் தந்தை தீபன் ரியல் எஸ்டேட் தொழிலும், தாயார் முனிஸ்வரி மாவட்ட மருத்துவமனை அதிகாரியாக உள்ளனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் தான் ஜிம்ஸ்ஷாம்காட்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 5 பிப் 2018