மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

ஹெல்த் ஹேமா: சளி தொல்லை நீங்க‌ - பாட்டி வைத்தியம்!

ஹெல்த் ஹேமா: சளி தொல்லை நீங்க‌ - பாட்டி வைத்தியம்!

அலர்­ஜியால் திடீ­ரென சளி பிடிக்கும். நாள்­பட்ட சளி­யா­னது காச­நோ­யாக மாறும். காய்ச்­சலை உண்­டாக்கும். அதிக சளியால் மூச்சு திணறல் உள்­ளிட்ட பிரச்சி­னைகள் ஏற்­படும். தூது­வ­ளையை பயன்­ப­டுத்தி சளி பிரச்சி­னையை தீர்க்கும் மருந்து தயா­ரிக்­கலாம். 10 தூது­வளை இலை­களை எடுக்­கவும். இத­னுடன், சிறிது முசு­மு­சுக்கை இலை, பனங்­கற்­கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்­விட்டு கொதிக்க வைக்­கவும். இதை வடி­கட்டி குடித்­து­வர சளி, இருமல் இல்­லாமல் போகும்.

சளி பிரச்சி­னைக்கு தூது­வளை மருந்­தா­கி­றது. இது, உஷ்­ணத்தை கொடுக்க கூடி­யது. உட­லுக்கு பலத்தை தரு­கி­றது. முசு­மு­சுக்கை சளியை போக்­கு­கி­றது. ஆயுளை அதி­க­ரிக்கும் தன்மை கொண்­டது. தூது­வளை, முசு­மு­சுக்கை பொடி நாட்டு மருந்து கடை­களில் கிடைக்கும். வெள்­ளெ­ருக்கம் பூவை பயன்­ப­டுத்தி ஆஸ்­துமா பிரச்சினை உள்­ள­வர்கள் எடுத்­துக்­கொள்ளும் மருந்து தயா­ரிக்­கலாம்.

வெள்­ளெ­ருக்கம் பூவின் இதழ்­களை நீர்­வி­டாமல் பசை­யாக அரைத்து எடுக்­கவும். இத­னுடன் மிள­குப்­பொடி சேர்க்­கவும். 4 பங்கு பூவுக்கு ஒரு பங்கு மிளகு என்ற அளவில் எடுக்­கவும். இதை நன்­றாக கலந்து சுண்­டைக்காய் அளவில் உருண்­டை­க­ளாக பிடிக்­கவும். இது காய்ந்­த­வுடன் மிளகு அள­வுக்கு கிடைக்கும். அன்­றாடம் இரு­வேளை மிளகு அள­வுக்கு சாப்­பி­டும்­போது ஆஸ்மா சரி­யாகும். ஆஸ்­து­மா­வுக்கு மிகவும் பாது­காப்­பான மருந்­தாக வெள்­ளெ­ருக்கம் பூ விளங்­கு­கி­றது. ஒரு வெள்­ளெ­ருக்கம் பூவுடன் 5 மிளகு சேர்த்து மென்று சாப்­பிட்டால் ஆஸ்துமா பிரச்சினை தீரும்.

கடுகை பயன்­ப­டுத்தி வறட்டு இரு­ம­லுக்­கான தேநீர் தயா­ரிக்­கலாம். கால் ஸ்பூன் கடுகு எடுத்து லேசாக வறுக்­கவும். இதை இடித்து எடுக்­கவும். இந்த பொடியில் ஒரு டம்ளர் அள­வுக்கு நீர்­விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடி­கட்டி தேன் சேர்த்து குடிப்­பதால் சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி, கண்­களில் நீர் வழிதல் போன்ற பிரச்­சினைகள் இல்­லாமல் போகும். இந்த தேநீரை 50 முதல் 100 மில்லி வரை குடிக்­கலாம்.

இரு­ம­லுக்கு கடுகு உன்­ன­த­மான மருந்­தா­கி­றது. பல்­வேறு நன்­மை­களை கொண்ட கடுகு காரம் மிக்­கது, உட­லுக்கு உஷ்­ணத்தை தரக்­கூ­டி­யது. நோய் எதிர்ப்பு சக்­தியை அதி­க­ரிக்க செய்­கி­றது. காய்ச்­சலை தணிப்­ப­துடன் வலியை குறைக்கும். வீக்­கத்தை கரைக்­கி­றது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 5 பிப் 2018