மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

பாஜக அரசு மோசமான நோயாளி!

பாஜக அரசு மோசமான நோயாளி!

மோடி தலைமையிலான மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மோசமான நோயாளி என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் குறித்து உண்மையான தகவல்களைக் கூறவும், நிலைமையை உணரவும் மோடி அரசு மறுக்கிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் நேற்று (பிப்ரவரி 4) கருத்து தெரிவித்துள்ளார்.

“2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பொறுப்பேற்ற தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் பொருளாதாரத்துக்கு மிகச் சிறந்த மருத்துவர். ஆனால், அவரின் ஆலோசனைகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு காது கொடுத்துக் கேட்பதில்லை. அது மோசமான நோயாளியாக இருக்கிறது.

பாஜக அரசு தொடர்ந்து அனைத்தையும் மறுத்துவருகிறது. நாட்டின் உண்மையான பொருளாதார சூழலை ஏற்க மறுக்கிறது. விவசாயிகளின் துன்பங்களை ஏற்க மறுக்கிறது. இளைஞர்கள் வேலையின்மையால் பாதிக்கப்படுவதை ஏற்க மறுக்கிறது. எதிர்க்கட்சிகளின் விவாதத்தையும் கேட்க மறுக்கிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ள அவர், இப்போது, கடந்த 2014ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார நலனுக்காக அமர்த்தப்பட்ட டாக்டர்(அரவிந்த் சுப்பிரமணியன்) ஆலோசனைகளையும், நோயைக் கண்டுபிடிக்கவிட அவரின் முயற்சியையும், அதற்கு சிகிச்சை அளிக்கவும் மத்திய அரசு மறுத்துவருவதாக விமர்சித்துள்ளார்.

மேலும், “நாடு எனும் வீட்டிலேயே இருக்கும் டாக்டர் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன். அவர் நாள்தோறும் தனது நோயாளிகளை (பொருளாதாரம்) பரிசோதனை செய்து வருகிறார். ஒருவேளை உடல்நலம் சரியில்லாமல் போனால், அதற்கான மருந்துகளையும், மருத்துவ சிகிச்சையையும் அளிக்கிறார்.

ஆனால், மோசமான நோயாளிகள் ஒருபோதும் மருந்துகளையும், மாத்திரைகளையும் எடுக்கமாட்டார்கள். அவர்கள் தங்களுக்குரிய நோயை சொந்தமாகக் கண்டுபிடித்து, மருந்துகளை சுயமாக எடுத்துக்கொள்வார்கள்.

பட்ஜெட் என்பது, சீர்திருத்தத்துக்கான ஒரு வரைபடம், ஒரு பட்டியலாகும்.

பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பாக 4 வகையான ஆர்களை (R) குறிக்கிறது. அங்கீகாரம் (Recognition), தீர்மானம் ( Resolution) மறுமுதலீடு (Recapitalisation), சீர்திருத்தம் (Reforms) ஆகியவற்றைக் குறிக்கிறது. இதில் முதல் 3 விஷயங்கள் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. ஆனால், கடைசி வியஷமான வங்கிச் சீர்திருத்தம் செய்யப்படவில்லை.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 5 பிப் 2018