மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

அஜித்துக்கு ஜோடி யார்?

அஜித்துக்கு ஜோடி யார்?

அஜித் நடிப்பில் உருவாகவுள்ள விஸ்வாசம் படத்திற்கு பூஜை போடப்பட்டு படப்பிடிப்பிற்கு தயாராகும் சூழலில் கதாநாயகி யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சிவா- அஜித் கூட்டணி நான்காவது முறையாக விஸ்வாசம் படத்திற்காக இணைந்துள்ளது.

வடசென்னை பின்னணியைக் கொண்ட இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா தரப்பில் படக்குழு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த கூட்டணி அமையவில்லை.

இந்நிலையில் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் வேதா படத்தின் மூலம் கவனம்பெற்ற ஷ்ரதா ஸ்ரீநாத் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ் திரையுலகில் சற்று அனுபவம் வாய்ந்த நடிகையாக இருக்கவேண்டும் என எண்ணிய படக்குழு அவரையும் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 5 பிப் 2018