மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

சாலை விபத்தைத் தடுக்க புதிய திட்டம்!

சாலை விபத்தைத் தடுக்க புதிய திட்டம்!

2016ஆம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அளித்த தகவலின்படி, 2016ஆம் ஆண்டில் அலட்சியப் போக்கால், 90 சதவிகித சாலை விபத்து மரணங்கள் ஏற்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விதிகளின் தேவை மற்றும் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது போன்றவற்றைக் கட்டாயப்படுத்துவது அவசியமானதாகும். ஏனெனில், விபத்தில் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல், சாலையில் நடந்துசெல்லும் அப்பாவி மக்களும் உயிரிழக்கின்றனர்.

சாலை விபத்துக்களைத் தடுக்க கேரள கோழிக்கோட்டில் ஒரு புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதிக விபத்துகள் நடந்த பகுதி,ஆபத்தான பகுதிகளை ஓட்டுநர்களுக்குச் சுட்டிக்காட்டுகிற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சாலை மையத்தில் ஒரு சதுர மஞ்சள் இணைப்புடன் ஒரு சிவப்பு நிறத்தினால் ஆபத்தான இடத்தையும் சிறப்பித்துக் காட்டுவதுதான் இந்த திட்டம். இதனுடைய முக்கிய நோக்கம் ,அந்த இடத்தில் வரும்போது பாதுகாப்பாக வாகனம் ஓட்ட வேண்டும் என்ற எண்ணத்தை அவர்கள் மனதிற்குக் கொண்டுவருவதுதான். இந்தச் சந்திப்புகளில் நிற்கும் போக்குவரத்து போலீசார் ஓட்டுநர்களிடம் இனிமேல் சாலை விதிகளைப் பின்பற்றுவேன் என உறுதிமொழி எடுக்கவைக்கிறார்கள்.

இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜித் தான் இந்த யோசனையை வழங்கியவர். 2017ஆம் ஆண்டில் நகரம் முழுவதும் 168 விபத்துப் பகுதிகள் ஆவணப்படுத்தப்பட்டன. 108 ஓட்டுநர்கள், 53 பாதசாரிகள் உள்பட 184 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். இந்தப் பகுதிகள் ஒவ்வொன்றிலும் வர்ணம் பூசப்பட்ட மஞ்சள், சிவப்பு அறிகுறிகளைக் கொண்டிருக்கும். இந்தச் சாலையில் ஓட்டுநருக்கு மிகுந்த கவனம் இருக்க வேண்டும்.

ஜனவரி 22ஆம் தேதி மூழிக்கால் பாலத்திலிருந்து இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அந்த இடத்தில்தான் ஒரு சுற்றுலாப் பேருந்து,மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

இந்தத் திட்டம் கிட்டத்தட்ட அதன் உச்சநிலையை அடையவுள்ளது. பெரும்பாலான விபத்துப் பகுதிகள் சிறப்பு அடையாளத்தைப் பெற்றுள்ளன. இது ஓட்டுநர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், பொறுப்புணர்ச்சியுடன் வாகனம் ஓட்டுவதற்கும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 5 பிப் 2018