மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 பிப் 2018

காங்கிரசை வெளியேற்றும் காலம் வந்துவிட்டது!

காங்கிரசை வெளியேற்றும் காலம் வந்துவிட்டது!

கர்நாடகாவிலிருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்றும் காலம் வந்து விட்டது என்று பெங்களூரில் நடைபெற்ற பரிவர்த்தனா யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளது. இதனால் ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடிக்க பாஜகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தொடர்ந்து பாஜகவை சார்ந்த உத்திரபிரதேச முதல்வர் யோகிஆதித்யநாத் உள்ளிட்டோர் கர்நாடகாவில் பிரச்சாராம் செய்து வருகின்றனர். இதனையொட்டி அம்மாநில முதல்வர் சித்தராமையாவும் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாதும் ட்விட்டரில் கடுமையாக மோதிக்கொண்டனர். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா 85 நாள் பிரச்சார யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

எடியூரப்பாவின் யாத்திரை நேற்றுடன்(பிப்ரவரி 4) முடிவடைந்த நிலையில் அதன் நிறைவு விழா பெங்களூரு அரண்மனை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,"கர்நாடகாவிலிருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்றும் காலம் வந்துவிட்டது. கர்நாடக காங்கிரஸுக்கு மட்டும் நாங்கள் முற்றுப்புள்ளி வைக்கப்போவதில்லை ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கலாச்சாரம் இல்லாத அரசியல், சமூகம், கலாச்சாரத்தை உருவாக்கப்போகிறோம்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசும்போது, நேற்று நமது இளம் இந்திய அணி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றுள்ளனர். அதற்கு பின்னணியில் முக்கிய காரணமாக இருப்பவர் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். அவர் நாம் எப்படி நேர்மையாக கடமையாற்ற வேண்டும், மற்றவர்களுக்காக வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கிறார் என்று மோடி புகழாரம் சூட்டினார்.

மேலும் தனது உரையின் இறுதியாக , கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும். விவசாயிகளை எடியூரப்பா இதயத்தில் தாங்குகிறார் என்றும் விவசாயிகளுக்காக செயல்படுத்த எண்ணற்ற திட்டங்களை வைத்துள்ளோம் என்றும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

தனியார் தொலைகாட்சிக்கு கடந்த வாரம் பிரதமர் மோடி அளித்த பேட்டியில், பக்கோடா விற்பதும் வேலை வாய்ப்புதான் என்று கூறியிருந்தார்.மோடியின் பேச்சை பல்வேறு தரப்பினரும் விமர்சித்திருந்த நிலையில்,நேற்று மோடி பேசிய பொதுக்கூட்டத்தில் சில இளைஞர்கள் 'மோடி பக்கோடா , அமித்ஷா பக்கோடா' என்று கூறி பக்கோடா விற்க ஆரம்பித்தனர். உடனடியாக காவல்துறை அவர்களை கைது செய்தது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 5 பிப் 2018