மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

பட்ஜெட்டில் ரயில்வே ஊழியர்கள் புறக்கணிப்பு!

பட்ஜெட்டில் ரயில்வே ஊழியர்கள் புறக்கணிப்பு!

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய ரயில்வே பட்ஜெட் ரயில்வே தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக இருப்பதாக ரயில்வே ஊழியர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

அனைத்திந்திய ரயில்வே பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா இதுகுறித்து வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2) அளித்துள்ள பேட்டியில், "2018-19ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் ரயில்வே ஊழியர்களின் நலனுக்கானதாக இல்லை. இது ஊழியர்களுக்கு எதிரானதாக உள்ளது. கடின உழைப்பைச் செலுத்தும் ரயில்வே பணியாளர்களுக்கு இந்த பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. கல்வி மற்றும் சுகாதார வரிகள் உயர்ந்திருக்கின்றன. இதனால் தனிநபர் வரியை உயர்த்தாதது எந்தப் பயனையும் அளிக்காது. ரயில்வே ஊழியர்கள் மத்திய அரசால் ஏமாற்றப்பட்டுள்ளனர்" என்று கூறியுள்ளார்.

ரயில்வே பணியாளர்களின் வசதிக்காக 2018-19 பட்ஜெட்டில் ரூ.314.24 கோடி நிதியை மத்திய அரசு அறிவித்துள்ளது. நடப்பு பட்ஜெட்டில் (2017-18) ரயில்வே பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையின் மதிப்பு ரூ.235.76 கோடியாகும். நிலையான கால வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டுமென ரயில்வே ஊழியர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஊழியர்களுக்கான விதிமுறைகளை சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்றி உருவாக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

ஞாயிறு 4 பிப் 2018