செல்லூர் ராஜுவுக்கு ஒரு விழா எடுங்கோ: அப்டேட்குமாரு

எடப்பாடி அரசு வெற்றிகரமா ஒரு வருசத்தை கம்ப்ளீட் பண்ணிட்டதால வர்ற் 14ஆம் தேதி விழா எடுத்து சிறப்பிக்க போறாங்களாம். உண்மையிலேயே இது ஆச்சர்யம் தான். ஓடாத கரகாட்டகாரன் கார் மாதிரி இருந்தாலும் இத்தனை நாள் வச்சு மெயிண்டய்ன் பண்ணி உருட்டிருக்காங்களே.. அதிமுக அரசு தமிழ்நாட்டுக்கு என்னத்தை பண்ணிருச்சுன்னு விழா வைக்காங்கன்னு யார் வேணுனாலும் கோபபட்டுக்கோங்க. ஆனா உண்மையில இந்த பாராட்டு விழாவை இந்த குமார் வரவேற்கிறான். ஏன்னு கேட்குறீங்களா? அமைச்சர்களின் அரிய கண்டுபிடிப்புகளும், அறிவார்ந்த பேச்சுகளும் தான் இந்த வருசம் என்னோட அப்டேட்டுக்கு பல நேரங்கள்ல கண்டண்ட்டா அமைஞ்சுருக்கு. இங்க பல பேரை மீம்ஸ் கிரியேட்டரா மாத்திருக்கு. இந்த நல்ல தருணத்துல நான் அந்த அமைச்சர் பெருமக்களை நன்றியோட நினைச்சு பார்க்கேன். இப்ப கூட செல்லூர் ராஜு அதிமுக அட்டை இருந்தா தான் அரசின் திட்டங்கள் கிடைக்கும்னு தன் பொன்மொழிகளை உதிர்த்துருக்காரு. இன்னும் ஒரு வாரம் அவரால நம்ம பசங்க மீம்ஸ் போட்டு பழகிக்குவாங்க. அனைத்து சமூகவலைதள மீம்ஸ் கிரியேட்டர் சங்கம் சார்பா கூட அன்னாருக்கு தனியா ஒரு விழா எடுக்கலாம்..ஆமாம்.. சொல்லிபுட்டேன்
@azam_twitz
"சிக்கல்" என்று வந்துவிட்டால் நமக்கு வேண்டாதவர்களைக் கூட சந்தேகப்பட தோன்றும்,
"விக்கல்" என்று வந்துவிட்டால் நமக்கு விருப்பம் உள்ளவர்களை மட்டும்தான் நினைக்கத் தோன்றும்!
@Kozhiyaar
திணிப்பதால் வயிறை தவிர வேறெதுவும் வளராது!!!
@madurai_jinna
செல்போன் வந்த பிறகு
ஆள்காட்டி விரல்
தொடுவிரல் என
பெயர் மாறிவிட்டது.!
@ShivaP_Offl
சிரித்து கொண்டிருக்கும்போது வரும் கண்ணீரின் “ருசி” தேனைவிட சுவையானது....!!!
@ajmalnks
ஒருவரின் முதிர்ச்சியை அனுபவத்தை அவரின் வார்த்தையை கொண்டே கணக்கிட்டு விடலாம்.
@mohanramko
விவசாயிக்கு லாபம் கிடைக்காமல் வியாபாரிக்கு லாபம் கிடைப்பது , சமைப்பவருக்கு டிப்ஸ் கிடைக்காமல் சர்வருக்கு கிடைப்பது போலவே...
@naatupurathan
ஏன்டா கோவிந்தா,
நா என்னமோ உன்ன பெரிய ரௌடி, வஸ்தாதுது நெனச்சேன், இப்டி சீட்டுக்கட்டாட்டம் பொட்டு பொட்டு னு ஊந்துட்டிங்க...!!!
SA_118_All_Out
@Nithya
உங்க கம்பெனியே யாரால ரன் ஆவுதுன்னு தெரிஞ்சிக்கணுமா..?
சிம்பிள்....!
ஒரு நாள் லீவு கேளுங்க....
அவங்களே சொல்லிடுவாங்க
Gowtham Youngstar
// மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதால் ஆட்சியாளர்களுக்கு ஆபத்து.
- ஜோதிடர்கள். //
இதெல்லாம் இந்த அரசால் மீனவ குப்பங்கள் எரிக்கப்பட்ட போதே எங்களுக்கு தெரிஞ்சு போச்சு.,
@Thaadikkaran
பழனிசாமி தலைமையிலான ஓராண்டு ஆட்சியின் வெற்றிவிழா பிப்.14-ல் கொண்டாடப்படும்: கடம்பூர் ராஜூ.
அர்ஜுன் சம்பத் தாலியோட சுத்துறாரு பார்த்து இருங்க..!
@HAJAMYDEENNKS
வாக்கிங்,ஜாக்கிங் போக நேரமில்லாதவங்க குழந்தைகளுக்கு உணவு ஊட்டினால் போதும்...!
@madurai_jinna
உண்மைக்கு குரல் கொடுப்பவர்கள்
"டப்பிங் ஆர்ட்டிஸ்ட்"களே.!
@Parimal
யாரோ சில திமுகவினர் ஒரு பெண்ணை மோசமாக திட்டிவிட்டதாக ஒரு பெண் நிரூபர் Tweet செய்ய திரு.ஸ்டாலின் உடனே அதற்கு கண்டனமே தெரிவித்துவிட்டார்
கனிமொழி அவர்களும் பெண்தானே. ஆனாஅவரை மிக மிக ஆபாசமாக பேசும் டம்ளர்களையும் சாதி மதவெறி கூட்டங்களையும் எந்த ஊடக பெண்ணியவாதியாவது கண்டித்தது உண்டா?
@senthilcp
ஒவ்வொரு தொகுதிலயும் கமலை விட ரஜினி 5000 ஓட்டு அதிகம்"வாங்குவார் பாரு
ஓஹோ,அப்போ கமல்?
அவரு நோட்டாவை விட 500 ஓட்டு அதிகம் வாங்குவாரு
ஓஹோ,அப்போ நோட்டா?
அதுதான் ஊருக்கே தெரியுமே?பாஜக வை விட 2000 ஓட்டு அதிகம் வாங்கிடும்
@HAJAMYDEENNKS
குழந்தைகளின் அழுகையும் டிராபிக் போலீசின் முறைப்பும் ஒன்றுதான்...
ஏதாவது கொடுத்தால் மாற்றிவிடலாம்...!
@amuduarattai
நாம் இரத்தம் கக்கி சாகாமல் இருக்கவும், நாம் தமிழன் என்று காட்டவும் தான், வாட்ஸப்பில், நிறைய மெசேஜ்கள் ஃபார்வேட் செய்யப்படுகிறது.
@senthilcp
தமிழகத்தில் ராகுல் காந்தி விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்
- திருநாவுக்கரசர்
கமல் ,ரஜினி ,விஜயகாந்த் ஏல்லாம் ஒரு ரவுண்ட் முடிச்சிடுவாங்க
@senthilcp
இந்து மதத்தை இழிவுப்படுத்துவதே திமுக கொள்கை; எம்மதமும் சம்மதம் என்பதே அதிமுகவின் கொள்கை- அமைச்சர் கடம்பூர் ராஜூ # அதிமுக வுக்கு கொள்கை எல்லாம் இருக்குங்கறதே இப்போ நீங்க சொல்லித்தாங்க தெரியும்,
@Bubbly_Girl
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம்,
இன்னொன்று மெளனம்.
@kds_twitz
பிப்ரவரி 14 அன்று ஜோடியாக சுற்றி திரிபவர்களை பிடித்து திருமணம் செய்து வைப்போம் - அர்ஜூன் சம்பத்
அண்ணே. மறக்காம அந்த சீர்வரிசையை சேர்த்து கொடுத்துடுங்க! நல்லா இருப்பிங்க
@Ktnisha294
பேருந்து கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெற அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்- விஷால்
தம்பி மனசுல யாரோ ஆழமா போய் நீங்க அரசியல்வாதி அரசியல்வாதினு நம்ப வெச்சிருக்காங்க அதான் இப்படியெல்லாம் பேசுறாரு
@Yasar_Tweets
வாழ்க்கை என்பது சோப்பு மாதிரி எவ்வளவு வேகமா தேய்க்கிறமோ அவ்வளவு சீக்கிரமே கரைஞ்சிரும்
கஷ்டம் என்பது கைல இருக்கிற ஆண்ட்ராய்டு மொபைல் மாதிரி தேச்சு தேச்சு விரல் தேஞ்சதுதான் மிச்சம்
@senthilcp
அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் தமிழக அரசின் திட்டங்களைப் பெற முடியும்: அமைச்சர் செல்லூர் ராஜு
வலுக்கட்டாயமா அதை வாங்க வச்சிட்டா அவங்க உங்களுக்கே ஓட்டுப்போடுவாங்கனு எந்த அறிவாளி ஐடியா குடுத்தது?
@indiavaasan
அந்த ஈரோட்டுக்காரனாவது என்னை இல்லை என்று சொல்லி முடித்துவிட்டார்!
இவர்கள் எனக்கு சாதி சாயம் பூச அலைகிறார்கள் என்று புலம்பியவாறே ஓடிப்போனார் பாவப்பட்ட முருகன்!
-லாக் ஆஃப்