மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

திருநங்கை தற்கொலை முயற்சி!

திருநங்கை தற்கொலை முயற்சி!

ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு இளைஞரின் உயிரிழப்புக்குக் காரணமான திருநங்கை ஸ்வேதா தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த சத்தியநாராயணா, காரம் வீரம்பாபு உள்ளிட்ட 4 பேர் காட்பாடியில் இருந்து திருப்பூர் நோக்கி நேற்று (பிப்ரவரி 3) பொகாரா எக்ஸ்பிரஸ் ரயிலில் படிக்கட்டு அருகில் அமர்ந்து பயணம் செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது திருநங்கைகள் சிலர் பணம் கேட்டு வந்துள்ளனர்.

சத்தியநாராயணாவிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த திருநங்கை ஒருவர், ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டதில் சத்தியநாராயணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்போது ரயிலில் இருந்து குதித்து சத்தியநாராயணாவை காப்பாற்ற முயன்ற காரம் வீரம்பாபு படுகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் திருநங்கைகளை தேடி வந்தனர்.

திருநங்கைகள் ஓவ்வோரு துறையிலும் முன்னேறி வரும் நிலையில் இதுபோன்ற ஒரு சம்பவம் அவர்கள் சமூகத்தில் ஒரு கரும்புள்ளியாக அமைந்தது. இதற்கு சக திருநங்கைகளும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 4 பிப் 2018