மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 பிப் 2018

சென்னை : 3 ரயில் நிலையங்கள் மூடல்!

சென்னை : 3 ரயில் நிலையங்கள்  மூடல்!

சென்னையில் மின்சார ரயில் சேவை இன்று (பிப்ரவரி 4) தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

தமிழகத்தில் ஜனவரி 13ஆம் தேதி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. பேருந்து கட்டண உயர்வுக்குப் பிறகு ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காலை 6 மணிக்கே ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில் பராமரிப்பு பணி காரணமாக பூங்கா, கோட்டை, கடற்கரை ஆகிய 3 ரயில் நிலையங்களுக்கு இன்று மின்சார ரயில்கள் இயக்கப்படவில்லை. தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கும், கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டுக்கும் தினமும் இயக்கப்படும் மின்சார ரயில்களில் தினமும் லட்சக் கணக்கானோர் பயணம் செய்கின்றனர்.

இன்று எழும்பூரில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் அனைத்து மின்சார ரயில்களும் எழும்பூரில் இருந்தே இயக்கப்பட்டன. செங்கல்பட்டிலிருந்து கடற்கரை வரை செல்லும் ரயில்கள், எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அதேபோல், சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து எழும்பூர் வழியாக செல்லும் வெளியூர் ரயில்களும், எழும்பூரிலிருந்தே இயக்கப்படுகிறது. இதனால் இன்று காலை எழும்பூரில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது .

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 4 பிப் 2018